உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

269

யெல்லாம் ஒரு வட்ட மேடையைச் சுற்றி அமர்வித்தார் என்று கூறப்படுகிறது. ஆயினும், இவர் காலத்தில் மிகச்சிறந்த புலவர்களுள் இருவர், அதாவது கவிஸென்னாவும் பிர்தாஸியும் இவரால் புறக்கணிக்கப்பட்டு பிற சிற்றரசர் ஆதரவு பெற்றதாய் அறிகிறோம்.

தில்

பாரசீக நாட்டின் பழங்காலக் கதைகளை ஒரே வரலாற்று வடிவில் தலைமுறை தலைமுறையாக வகுத்து (காளிதாசன் ரசுவம்சமும் சோழர் மாகீர்த்தியும் போல) வீரம் செறிந்த பெருங் காப்பியமாக அமைக்கப்பட்ட நூல் பிர்தாஸியின் ஷாநமா. பழங்கதைக்கால அரசன் முதல் தொடங்கி ஈரானிய மரபின் கடைசி அரசன் வரை 59 அரசர் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. ஈரான், தூரான் என்ற இரு பெருமரபினர் போராட்டம் இதன் நடுநாயகச் செய்தியாகும். ஸால் என்ற முதிய வீரன் துறவு (தியாக வாழ்க்கை) ரஸ்தம் வீரச் செயல்கள், தன் மகன் என்றறியாது ஸோரபை ருஸ்தம் கொன்ற அவலக்கதை ஆகியவை ஆங்கில முதலிய மேனாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகப்புகழ் அமைந்துள்ள பகுதிகள் ஆகும். இரண்டிண்டடிஈற்றெதுகையுடன் அகவல் போன்ற பாவகையில் (மஸ்னவி) எழுதப்பட்ட ‘யூஸூப்பும் ஜூலைகாகவும்' அவர் சிறுகதைக் காவியம் ஆகும்.

அவிஸென்னா அரபு மொழி இலக்கியத்துக்கும் மருத்துவம்,மெய்விளக்கம் ஆகிய துறைகளுக்கும் உரியவராயினும் பாரசீ கத்திலும் 'தானிஸ் நமாயி அலாயீ' என்ற பல பொருட் களஞ்சியம் எழுதினர். இவர் எழுதிய நாலடிப்பா வண்ணங்கள் உமர் கய்யாமின் பாடல்களில் இடையிடையே சேர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது. இக்காலத்தில் பிற புலவர்கள் உன்ஸூரியும் பரூகியும் ஆவர்.

6. ஸல்யூக் மரபினர் காலம்

ஸல்யூக் மரபினர் கஜினி மரபினரை அழித்து, பாரசீகத்தையும் ஈராக்கையும் வென்று ஆண்டனர். இவர்கள் ஆட்சியில் அமைச்ச ராயிருந்த நிஜாம் உல்முல்க் பக்தாத் நகரில் ‘நிஜாமியா' என்ற பெயருடன் ஒரு பல்கலைக்கழகம் நிறுவினார். இஸ்லாமியக் கலையையும், பாரசீகக் கலையையும் மங்கோலியர் அழிவினின்றும் காக்க இது பேருதவி செய்தது. அமைச்