உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




270 ||

அப்பாத்துரையம் - 44

சராயிருந்த இவர் நல்லாட்சி முறையின் தன்மைகளை விளக்கி ஸூஜாஸத்நமா' என்ற அரசியல் நூல் எழுதினார். இக் காலத்தில் புதிய சமய இயக்கங்களும் அறிவியக்கங்களும் அரசியல் இயக்கங்களும் தோன்றின. ஷியாக் கிளைச் சமயத்தின் கிளையாக எழுந்த இஸ்மாயிலிய (அரசியல் சமயக்) கிளையையும் மறைநிலைச் சமயத் துறையாகிய சூபி இயக்கத்தையும் ஆதரித்த பெரும் புலவர் நஸீரி குஸ்ரூ இக் காலத்தவர். இவர் இஸ்லாமிய உலகெங்கும் கற்றி இறுதியில் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் தங்கினார். தம் பயணம், தம் சமயக் கருத்துக்களில் ஏற்பட்ட படிப்படியான மாற்றம் ஆகிய வற்றை இவர் 'ஸபர்நமா' என்ற நூலில் விளக்கியுள்ளார். இவை தவிர ‘தீவான்’5 என்ற மெய்விளக்க நூலும் 'ரவ்ஷானா னாயீரமா’ 'ஜாதுல் முஜபிரி' ஆகியவையும் இவர் பல்துறைத் திறனுக்குச் சான்றாகும்.

இக்கால ‘ஆபி புலவர்களுள் அபுஸாயித், ஹாராட்டைச் சேர்ந்த அன்ஸாரி, ஸனாயீ, உமர் கய்யாம் ஆகியவர்கள் தலை சிறந்தவர்கள். ஸூபிக் கருத்துக்களை அகவல் (மஸ்னவி) பாவில் எழுதும் பழக்கத்தைக் கொணர்ந்தவர் ஸனாயீ. மெய்விளக்கக் கருத்துக்களைக் கதையுருவமாக்கும் சூபிகள் வழக்கத்தைத் தோற்று வித்தவரும் இவரே. (வடமொழி பிரபோத சந்திரோதயம் இம்முறை பற்றியது). இவரது ஹநிகத்துல் ஹகீகா (வாய்மையின் தோட்டம்) அத்தார், ரூமி முதலிய பெருங் கவிஞர்களுக்கு முன்மாதிரிகளாய் அமைந்த நூல் ஆகும்.

உமர் கய்யாமின் பெயர் பாரசீக உலகில் வானநூல், கணக்கியல் ஆகிய துறைகளுக்கே மிகவும் உரியதாகக் கொள்ளப் பட்டிருந்தது. ஆனால், சமயம், கவிதை, இன்ப வாழ்வு, துறவு ஆகியவற்றின் எல்லைகளில் விளையாடும் கனவுலகக் கவிதையாகிய அவரது பேர்போன நாலடிவண்ணம் இன்று இலக்கிய உலக முழுமையையும் திறைகொண்டுள்ளது. தமிழில் மூன்று கவிஞர்கள் இதனை மொழிபெயர்க்கப் போட்டி யிட்டுள்ளனர். ஆங்கிலத்திலும் அவ்வாறே.

அல்ஜூர்ஜானி என்பவரது ‘விஸ்-உ-ரமீன்' இக் காலத்திய சிறந்த புனைகதைக் காப்பியம். இவர் இயற்றிய பல்பொருள் களஞ்சியமும் ஒன்றுண்டு. 'காபு' இளவரசன் பேரனான காபு