உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

(271

எழுதிய காபுஸ்நமா இன்றும் மேற்கோளாகக் காட்டப்பெறும் ஒழுக்கநூல் ஆகும். அலகஜலி என்பவர் அரபில் தாமே எழுதிய சூபி இஸ்லாமிய சமயநூலின் சுருக்கமாக ஹுஜ்ஜத் உல் இஸ்லாம் (இஸ்லாமின் சான்று) என்ற நூலை எழுதினார்.

வித்தியாபதி கதைகள் என்ற பழைய பஞ்சதந்திரக் கதை களைப் பாரசீகத்தில் மொழிபெயர்த்து எழுதியவர் நஸ்ருஇல்லா ஆவார். இது உண்மையில் ஐந்து அல்லது பஹ்லவியிலும் அதன்பின் அரவிலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பின் பாரசீகத்தில் மொழி பெயர்க்கப்பட்டதே.16ஆம் நூற்றாண்டில் பாரசீகத்திலிருந்து இலத்தீனிலும் ஐரோப்பிய மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப் பட்டது.

இக் காலத்தின் பிற்பகுதியில் சொல்லடுக்கும் எதுகை மோனையும் செயற்கை அணிகளும் நிறைந்த கஸீதாக்கள் என்ற புதுவகை நூல்கள் எழுந்தன. கஸீதா எழுதிய புலவர்களில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்நத அன்வாரி முதல்வர். அத் துறையில் சிறப்புக்குரியவர் ‘காகானி”. மக்காவுக்குத் தாம் செய்த பயணத்தை ஈராக்கின் வண்மை (துஃபதுல் ஈராக்கியம்) என்ற நூலிலும், தம் சிறை வாழ்வு பற்றி 'ஹப்ஸீயா' என்ற நூலிலும் எழுதியுள்ளார். செய்யுள் வகைப்பறிற் அஸிரு என்பவர் எழுதிய நூலிலும் சூஸானியின் வசைப்பாடல்களும் இத் துறையைச் சார்ந்தவை.

இக் காலத்தின் இறுதியில் எழுந்த இருபெருங் கவிஞர்கள் கஞ்சாவைச் சார்ந்த நிஜாமியும் அத்தாரும் ஆவர். நிஜாமி பாரசீகத்தின் புனைகதை மன்னர். குஸ்ராவ் உஷிரீன், லைலா மஜ்னூன், பஹ் ராம்குர், ஹஃப்த் பைகர் (ஏழு கதைகள்) இஸ்கந்தர்நமா ஆகியவை இவரின் ஒப்புயர்வற்ற ஐந்து இலக்கிய மணிகள். லைலா மஜ்னூன் கதையை உலகில் அறியாதவர் இல்லை. அது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டுடன் ஒப்புமையும் ஒப்பும் உடைய சிறந்த துன்பக் கதை.

அத்தார் என்னும் பெயர் மருந்துக் கடைக்காரனைக் குறிக்கும். அவர் செய்துவந்த தொழிலாலேயே இக் கவிஞர் சிறப்பிக்கப் பட்டார். மங்கோலிய அரசன் செங்கிஸ்கான் கொடுமைக்கும் தப்பிய கவிதைக்குயில் அத்தார் ஒருவரே. மண்டி குல்தப்பர் (பறவைகள் பேச்சு), பண்ட்நமா (அறிவுரைக் கொத்து),