அப்பாத்துரையம் - 44
(272) || முஸீ பத்நமா (ஊழ்வினை பற்றிய கதைகள்), ஷுதுர்நமா (ஒட்டகைக் கதை), புல்புல்நமா (குயில் கதை) ஆகியவை அவர் சிறந்த நூல்கள், சமயமும் அறிவுரையும் கதையும் பழமொழிகளும் விராவிய கூட்டுணவுகள் அவர் நூல்கள்.
7. மங்கோலிய ஆட்சி
மங்கோலிய ஆட்சிக் காலத்தின் தலைசிறந்த புலவர்கள் மறைநிலை இலக்கிய மன்னன் ரூமி, ஒழுக்கத்துறை இலக்கிய மன்னன் ஸாதி, பாரசீகத்தின் ஷேக்ஸ்பியர் எனப்படும் ஹபீஸ், பாரசீகப் பெருமை யனைத்தின் கடைசி நிறைமலர்ச்சி எனக் கொள்ளப்படும் ஜாமி ஆகியவர்கள் ஆவர்.
ரூமி இஸ்லாமியரால் ‘குர் ஆன் எழுதாத நபி' என்று புகழப் பெறுபவர். அவர் எழுதிய ‘மஸ்னவீ இ மஸ்னவி' பழம் பாரசீக மொழி நடையில் ஆறு பகுதிகளாக எழுதப்பட்ட பெரிய சமயநூல். சூபிகள் கருத்துக்கள், கதைகய், வரலாறுகள் எல்லாம் நிறைந்த பல்கலைக் களஞ்சியம் எனத்தகும் பெருமையுடையது அது. ‘ஹபீஸின் அகலமும் விரிவும் இவரிடம் இல்லையாயினும் அவரினும் உயரிய இன்னிசை ரூமியிடம் உண்டு' என்பர் அறிஞர்.
ஸாதி, பாரசீகத்தின் வள்ளுவர் அல்லது டால்ஸ்டாய். அவர் வாழ்க்கையும் அறவுரைகளும் இயேசு வாழ்க்கையை நினை வூட்டுவன. எவ்வுயிரிடத்தும் எத்தகையாரிடத்தும் தடைப்படா அருளிரக்கம் இவர் நூல்களில் கண்ட தனிச்சிறப்பு. அவர் எழுதி யவை எல்லாம் இனிய புனைகதைகளாதலால் பொன்மலர் மணமும் பெற்றதென இனிமையும் அருளும் அவரிடம் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. பூஸ்தான் (பழத்தோட்டம்), குலிஸ்தான் (ரோஜாத் தோட்டம்) இரண்டும் அவர் இன்னுரைப் பூங்கொத்துக்கள்.
நஜீர்உல்தீன் ஆசாரக்கோவை போன்ற அக்லாகிநஸீரியும் மியாருவ் கஷர் (கவிதையின் உரைகள்) என்ற செய்யுளிலக்கண நூலும் இயற்றினார். ஜக்கானி என்பவர் அக்லாஜியில் குறிப்பிட்ட அராபியர்களைக் கண்டித்து நகையாடும் முறையில் அக்லாகுல் அஷாரஃப் என்ற நூல் இயற்றினார். 'முஷ்உகுரபா (பூனையும் எலியும்) என்ற இவர் வசைநூல், வசைநூலுலகில் ஸ்விஃப்டின் வசை நூல்களுடன் ஒப்பிடத் தக்கது.