உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

அப்பாத்துரையம் - 44

எடுத்துக்காட்டாக, பழைய சுதந்திர நெசவாளி சொந்தக் கைத்தறியை வைத்துக்கொண்டு புதிய தொழிற்சாலையாகிய கருவியுடன் போட்டியிட முடியவில்லை. இங்ஙனம் போட்டிக்கு நிற்காத கருவியாகிய தறியை உடைய அவர்கள் கையிலிருந்த கருவியுரிமை நழுவிப்போவது இயல்பே. இதற்குமுன் தமக்குத் தாமே மேலாளாகவும், தம் கருவிகளுக்குத் தாமே உரியவர்களாகவும் இருந்து தாம் உற்பத்தி செய்யும் பொருளைத் தாமே விற்பனை செய்யும் வணிகர்களாகவுமிருந்து வாழ்ந்து வந்த இவர்கள், முதலாளிகள் என்ற ஒரு புத்தம் புதிய வகுப்பின் ஆதிக்கத்துக்கு உட்படவும், தமக்குச் சொந்தமில்லாமல் அவர்களுக்கே சொந்தமான கருவிகளைக் கொண்டு வேலை செய்யவும், தாம் உற்பத்தி செய்த பொருளைத் தாமே விற்பதற்கு மாறாகத் தம் வேலையின் கூலியை மட்டுமே பெற்று வாழவும் நேர்ந்தது!"

ங்கிலாந்தில்

முதலாளித்துவம் முதன் முதலாக நிலையமைக்கப்பட்டு அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்குப் பரந்தது.எங்கும் அது பழைய முறை வாழ்க்கையை வென்றடக்கித் தன் முன் தோற்றோடியவர்களை மீளா அழிவுக்கு அனுப்பியது.

சில ஆசிரியர்கள் முதலாளித்துவத்தின் தோற்றத்திற்குக் காலவரையறை தர முயன்றுள்ளார்கள். இங்கிலாந்தின் காசகம் (Bank of England) நிறுவப்பட்ட காலமாகிய 1694-ஆம் ஆண்டே அதன் பிறந்த நாளாக அவர்களால் கூறப்படுகிறது. வேறு சில ஆசிரியர்கள் இதுபோலவே 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சமயப் போர்களிலிருந்து அதன் வளர்ச்சியைத் தொடங்கு கின்றனர். ஆனால், ஒரு சமூக முறை ஏற்படுவதற்குத் திண்ணமான கால வரையறை கூற முடியாது. அது ஒரு குழந்தை பிறப்பதுபோல் ஒரு நாளில் பிறந்து விடுவதன்று. மெள்ள வளர்ச்சி பெற்று உருவாவது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகக் கூறமுடியும். தொழிற்புரட்சியின் பயனாகவே அது ஏற்பட்டது.