உலக இலக்கியங்கள்
(273
மொழியின் இனிமை, மனித வாழ்வின் ஆழத்தையும் அகலத்தையும் அளந்துணரும் திறன், உவமை நயம் ஆகியவற்றில் ஷேக்ஸ்பியர் போன்ற உலகக் கவிஞர் வரிசையில் சேர்க்கப்படத் தக்கவர் ஹபீஸ். அவர் சித்திரக்காப்பியம் (அஸிதா), நாலடிவண்ணம் (ரூபா-இயத்), அகவல் (மஸ்னவீ) ஆகிய எல்லாத் துறைகளிலும் சிறப்புடையார். ஆயினும், அவருக்கே உரிய ஈடும் எடுப்பும் அற்ற துறை எழுச்சிப் பாடல்° துறை ஆகும்.
பாரசீகப் பெரும்புலவர் வரிசையில் காலத்தால் கடைசி யானவர் ஜாமி. ஜாம் என்ற இடத்தில் பிறந்தவர் என்பதனால் அவர் ஜாமி எனப் புனைப்பெயர் அடைந்தனர். இவரும் சூபி நெறியில் ஆழ்ந்த பற்றுடையவரே. ஹப்த் அவ்ரங்க் (ஏழு அரசிருக்கைகள்) என்ற நூல் தொகுதியும், அஷியாதல்லமா அத் என்ற உரைநூலும், சூபி முனிவர் வரலாறு ஒன்றும், பகாரிஸ்தான் (இளவேனில் உறைவிடம்) என்பதும் அவரின் சிறந்த நூல்கள். இறுதி நூல் 'சாதி'யின் குலிஸ்தானைப் போன்றது.புலமையில் சிறந்த இக் கவிஞர் பாரசீகத்தில் இன்றும் எல்லாக் கவிஞர் திறமும் உடையவர் எனப் போற்றப்படுகிறார். ஆயினும், அவர் காலத்தில் வளர்ச்சி குன்றிவிட்டதாதலால் புதுமை மணம் மங்கிச் சொல்லணிகளே மிகுந்துவிடுகின்றன.
8. அண்மைக் காலம்
15ஆம் நூற்றாண்டிக்குப்பின் பாரசீக அரசியல் முற்றிலும் சீரடைந்து விட்டதென்னலாம். அரவிய மொழி ஆதிக்கமும் அரசியல் ஆதிக்கமும் மட்டுமின்றி, மங்கோலிய ஆதிக்கமும் ஒழிந்தது.சமயத்தில்கூடப் பாரசீக நாட்டில் எழுந்த உள்நாட்டுச் சமயக் கிளையாகிய ஷியா நெறி ஸஃபாயி மரபினர் காலத்தில் அரசியலாளர் நெறியாய் மாறிற்று. அதன் முனைத்த முன்னணியான இஸ்மாயில் மரபினரே தவிசேறினர். அந் நெறிச் சார்பான இலக்கியம் ஆதரவு பெற்றது. ஆயினும், அரசியல் விடுதலைப் போரிடை யேயும் தளராதிருந்த இலக்கிய வீரம் அதன்பின் முற்றிலும் தளர்ச்சி யடைந்துவிட்டது. அண்மைக் கால இலக்கியம் உண்மையில் தமிழ்நாட்டு அறிவுப் புலவர், கவிராயர் நூல்கள் போன்ற இரண்டாத் தரத்தவையே. ஜாமைச் சார்ந்த ஹதிபியும் பிகானியும் இக் காலத்தின் குறிப்பிடத்தக்க புலவர். முன்னவர் புனைகதைகள் காவியம் எழுதினர். பின்னவர்