உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(276

அப்பாத்துரையம் - 44

கன்னட இலக்கிய வரலாற்றில் தொடக்கத்தில் சமண சமயமும், பின் வீரசைவ சமயமும் இறுதியில் வைணவ சமயமும் தலைமைநிலை பெற்றன. சமணர் சமயத்துக்கு முற்பட்ட இலக்கியம் காணப்படவில்லை. இச்சமய இயக்கத் தொடர்ச்சி வரிசை தென்மொழிகளின் வரலாற்றில் ஒன்றன்பின் ஒன்றாகவந்த சமய இயக்கங்களின் வரிசை முறையைக் காட்டுவதாகும்.

3. தமிழிலக்கியமும் கன்னட இலக்கியமும்

கன்னட இலக்கியத்தின் வீரசைவப் பகுதி சிறப்பாகவும் சமணப்பகுதி ஓரளவுக்கும் தமிழிலக்கியத்துடன் தொடர் புடையன. சைவ சமய நாயன்மார் அறுபத்து மூவரும் வீர சைவரால் பழஞ் சைவ நாயன் மார்(புராதனர்)களாகக் கொள்ளப் பட்டனர். அவர்களுள் சம்பந்தரைப் பற்றித் தமிழகத்தில் இல்லாத கதைகள்கூடக் கன்னட நாட்டில் வழங்குகின்றன. அறுபத்து மூவருள் சேர்க்கப்படாத மாணிக்கவாசகர் கன்னட வீரசைவரால் வீரசைவத் தொண்டர் தாண்டர் 770 பேர்களுள் தலைசிறந்தவராகக் கொள்ளப்படுகிறார். இவர்கள் தவிர வீரசைவத்தின் சிறப்புத் தலைவர்கள் பசவர், சென்னபசவர், அல்லமர் முதலியவர் ஆவர்.

தமிழிலுள்ள குறள், நாலடியார், மூதுரை, நல்வழி முதலிய நூல்கள் கன்னட வைணவ இலக்கியத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இதைத் தவிரத் தமிழிலக்கிய நூலான பிரபுலிங் கலீலைக்கு முதனூல் கன்னடப் பிரபுலிங்கலீலையே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னட மொழி ஹனகன்னடம் (பழங்கன்னடம்), ஹொள கன்னடம் (புதுக்கன்னடம்) என இரு பிரிவாகப் கொள்ளப் படுகிறது. ஹௗகன்னடம் செந்தமிழ் போன்ற பழமை வாய்ந்த மொழிநடை. பொது மக்கள் மொழியையே வீரசைவ இயக்கம் பின்பற்றியதால் எழுந்த புத்திலக்கிய மொழி புதுக்கன்னடம். கன்னடைப் புலவர் ஹௗகன்னடத்தை விடாது ஆதரித்து இன்றும் அதில் சிறுபான்மையாக நூல்கள் இயற்றி வருகின்றனர். புதுக்கன்னடத்தைவிட ஹளகன்னடம் தமிழுடன் நெருங்கிய

உறவுடையது.