(278
அப்பாத்துரையம் - 44
சோழர் படையெடுப்பால் 11ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியிலும் கன்னட நாட்டில், இலக்கிய வாழ்வு முற்றிலும் சீர்குலைந்தது. அதன் இறுதியில் தமிழகத்தில் தண்டியாசிரியர் காலத்தில் வடமொழி தமிழ் மொழி இரண்டிலும் எழுந்த சொல்லணிச் சித்திர அணிப் பித்துக் கன்னட நாட்டிலும் பரந்தது.சந்திரராசன் என்பவர், பல சந்தங்களுக்கு இடம் தருவதும் பொருளும் ஒலிப்பும் ஒத்தியைந்ததும் ஆன மதனதிலகம் என்ற அணி நூல் ஒன்று இயற்றினார்.
பல்லான
அரசன் அவைப்புலவர் நாகசந்திரர் அவிநவபம்பர் எனப் புகழுப்படுபவர். அவர் எழுதிய பம்ப ராமாயணம் எனப்படும் இராமச்சந்திர சரித்திர புராணம் 12ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் ஆகும்.
கதையளவில் இந்த இராமாயணம் வால்மீகி இராமா யணத்தை ஒத்தாயினும், சமண இராமாயணங்களை ஒட்டி இது பல நிகழ்ச்சிகளில் அதனின்றும் மாறுபட்டதாகும். கிட்கிந்தை மக்கள் குரங்குகள் அல்லர், குரங்குக் கொடியுடைய நன்மக்களே என்பதும்; இரவாணன் வான ஊர்தி செல்லும் திறமுடைய நல்லரசனே, பத்துத்தலை அரக்கன் அல்லன் என்பதும்; இராவணன், கரன் முதலியவர்கள் கொலை வேள்வியை எதிர்த்த சமணர்களே,அரக்கர் அல்லர் என்பதும் இந் நூலின் தனிப்பட்ட வேறுபாடுகள் ஆகும்.
பல்லாள அரசவைப் புலவருள் தமிழ்நாட்டு ஒளவை போன்ற காந்தியார் என்ற பெண்புலவரின் பெயரும் காணப் படுகிறது. நாகச் சந்திரன் - காந்தியார் பாட்டுப் போட்டி ஒளவை- கம்பர் போட்டிக் கதையை நினைவூட்டுவதாயுள்ளது.
நாகவர்மன் (பிந்தியவர்) எழுதிய கர்நாடக பாஷா பூஷணம் கன்னட மொழியின் தலைசிறந்த இலக்கணங்களுள் ஒன்று. இவர் எழுதியயாப்பணி இலக்கணமாகிய காவியாலோகனம், மணி மேகலை போலப் புறச்சமயத்தை மறுத்துத்தன் சமயம் நிறுவும் சமய நூலான பிரமசிவாவின் சமய பரீஷையும் இதே ஆசிரியரின் ஆனின மருத்துவ நூல் என்னும் விலங்கு மருத்துவம்' பற்றிய செய்யுள் நூலும் இக் காலத்திய பிற குறிப்பிடத்தக்க நூல்கள். இக் காலத்தில் சமணரல்லாதார் இயற்றிய நூல் ‘துர்க்க சிம்மனின் பஞ்ச தந்திரம்' என்ற 'சம்பூ' நூலே. இது பிசாச