உலக இலக்கியங்கள்
(279
மொழியில் (காஷ்மீர எல்லை மொழியில்) குணாட்யன் எழுதிய முதல் நூலின் மொழிபெயர்ப் பாகும்.
5. வீரசைவ காலம் (12-18ஆம் நூற்றாண்டுகள்)
வீரசைவ காலத்திலும் அதன்பின்னும் சமண நூல்கள் எழுதப் பட்டே வந்தன. 24 தீர்த்தங்கரர் வரலாறுகளும் அவற்றில் பேரிடம் பெற்றன. வீரசைவ இயக்க காலத்தில் இதுபோல் நாயன்மார் வரலாறும் வீரசைவத் தலைவர் வரலாறும் சிவபுராணக் கதைகளும் மிகுதியாக வழங்கின. சைவம், சமணம் ஆகியவற்றைப் போலவே வீரசைவமும் மிகப் பழைய சமயமே.
ஆயினும், 1160 இல் காலசூரி மரபினனாகிய பிச்சள மன்னனை எதிர்த்துப் பசவரும் சென்னப் பசவரும் எழுப்பிய இயக்கத்தாலேயே அது புத்துயிர் பெற்றது. வடமொழியும் பழைய காவிய வழக்கும் கலந்த சமய இலக்கிய நடையைப் புறக்கணித்து வீர சைவ எழுத்தாளர் எளிய பேச்சுநடையில் எழுதினர். இது இச் சமயத்துக்கு மிகுதி ஆக்கம் அளித்தது.
அரீசுவரர் அல்லது அரிகரர் என்ற புலவர் 1165-லேயே 63 தமிழ் நாயன்மார் வரலாறுகளை ‘ரகளே' என்ற நாட்டுப் பாடல் உருவில் ‘சிவகணத ரகளே' என்ற நூலாகச் செய்தார். முதல் நாயனார் புராணப் பெயரை ஒட்டி அது 'கம்பியண்ணன ரகளே' எனவும் பெயர்பெறும். 'பார்வதி திருமணம்' பற்றிய 'கிரிஜா கல்யாணம்' இவர் எழுதிய பெருங்காப்பியம்.ஹம்பியில் கோயில் கொண்ட விரூபாக்கப் பெருமான்மீது 'பம்பசதகம்' என்ற நூறு பாடல்கள் இவரால் இயற்றப்பட்டது.
இவர் சீகூரின் வைணவ அரசனைப் பற்றி அரிச்சந்திர காவியம் எழுதியது. குறித்து அவர் மாமன் வருந்தியதாகக் கூறப்படுகிறது. அவ் வருத்தம் தீர ‘சித்தராம புராணம்' என்ற வீரசைவத் தொண்டர் வரலாறும் அவர் ஆசிரியர் அரீசுவரர் புகழ்பற்றிய அரிகர மகத்துவம்' என்ற நூலும் எழுந்தனவாம்.
பேலூர்க் குளத்தை அமைச்சர் என்ற முறையில் கட்டியதனால் 'கெரெய' என்ற புனைபெயர் பெற்ற பத்மராசர் "தீக்ஷாபோதம்” என்ற “சமய வினா விடைப் பாடல்” (ரகளே) நூல் இயற்றினார். இவர் புதல்வரும் சிறந்த கவிஞர் ஆவர்.