280
அப்பாத்துரையம் - 44
க்
தேவகவியின் ‘குசுமாவதி' அழகிய நடையில் அமைந்த 'சம்பூ' நூல். கன்னடத்தின் தலைசிறந்த காதற் புனைவு கதைகளுள் இது ஒன்று. ஓவியங்கண்டு காதலித்த ஓர் இளவரசனும் இளவரசியும் இதன் கதைத் தலைவர் ஆவர். மேற்குக்கரை நாட்டில் ஒரு சிற்றரசாயிருந்ததாகக் கூறப்படும் சாமராசர் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய 'சிருங்கார ரசம்' பரிவாரத்துடன் கயிலை சென்ற ஒரு மன்னவன் கதையாகும். இது மேற்குக்கரை மன்னனாகிய சேரமான் பெருமானின் கதையை நினைவூட்டுவதாகும்.
14ஆம் நூற்றாண்டின் சிறந்த புலவர்கள் பீமசுவியும் குப்பி நகரைச் சார்ந்த மல்லனார்யரும் ஆவர். பிமகவி பசவ புராணத்தின் ஆசிரியர். கன்னடத்தில் பெரும்பான்மை வழக்குடைய அறுசீர் விருத்தத்தில் (ஷட்பதி) இது எழுதப் பட்டுள்ளது. மல்லனார்யர் வீரசைவாமிர்தம், சிவபக்தர புராணம், பாவசிந்தா ரத்தினம் அல்லது சத்தியேந்திர சோழ கதை ஆகியவற்றின் ஆசிரியர். இறுதி நூல் பிள்ளை நாயனார் (திருஞான சம்பந்தர்) எழுதியதாகக் கூறப்படும் சத்தியேந்திர சோழன் கதையைத் தழுவியதாகக் கொள்ளப்படுகிறது. திருஞானசம்பந்தர் கதைகளில் கன்னட நாட்டில் பாண்டியன் பெயரைவிட மிகுதியாக இச் சோழன் பெயர் கூறப்படுகிறது.
வீரசைவ காலச் சமண இலக்கியத்துள் 12 ஆம் நூற்றாண்டி னனாகிய நேமிச்சந்திரன் இயற்றிய 'லீலாவதி கன்னடத்தின் முதல் புதுமைப் புனைகதை. ஆகும் 13 ஆம் நூற்றாண்டின் சன்னன் இயற்றிய 'யசோதா சரித்திரம்' தமிழ் யசோதரகாவியத்தை நினைவூட்டுவது. சிசுமாயனன் கன்னடத்தல் புகழடைந்த இலக்கியத் துறையாகிய 'சாங்கத்திய முறையை (இசை நாடகப் பாடல்)த் தோற்றுவித்தவன். அஞ்சான சரித்திரம், திரிபுர தகனம் ஆகியவை அவன் எழுதிய இசைப் பாடல் நூல்கள்.
ஆண்டய்யா என்னும் புலவர் தம் நூலிலும், நூற்பெயரிலும் தூய கன்னட நடையைப் பின்பற்றியவர் வடமொழிக் கலப்பால் கன்னடத்தின் வளப்புக் குன்றியவருகிறதென இவர் அறைகூவினர். இவர் நூல்கள் 'கப்பிகாரகாவ' (கவிஞர் பாதுகாப்பு), 'காவென கெல்ல' (காமன் வெற்றி) என்பவை. ஆங்கிலத்தில் 'பொன் கருவூலம்,2 என்ற அழகிய கவிதைத் திரட்டுக்கொப்பாகக்