உலக இலக்கியங்கள்
281
கன்னடத்தில் ‘காவிய சாரம்' என்ற பாடல் திரட்டு அமைத்த பெருமை மல்லிகார்ச்சுனருக்குரியது. இன்றைய கன்னட இலக்கிய ங்களுள் தலைசிறந்த ‘சப்தமணி தர்ப்பண’த்தின் ஆசிரியரான கேசிராசர் இக் காலத்தவர்.
இரட்டகவி என்பவர் எழுதிய இரட்டசூத்திரம் கீழ்நாடு களிலேயே காணப்படாத அரிய அறிவுநூல். இது நில அதிர்ச்சி, இடி, வழி எதிர்ப்புகள், கோள் நிலைகள் ஆகியவை பற்றிய உண்மைகளை அக் கால நிலைக்கு ஏற்ப விளக்கப் புகுந்த அறிவு விளக்க நூல். குமுதேந்து ராமாயணம், கசேந்திர மணிதர்ப்பணம் என்ற இலக்கணம். அபிநவ சந்திரர் இயற்றிய குதிரை மருத்துவம் பற்றிய நூல் ஆகியவை இக் காலத்தில் குறிப்பிடத்தக்க நூல்கள். 6. வைணவ கால இலக்கியம் (18-19 நூற்றாண்டுகள்)
தமிழ்நாட்டில் பிறந்த இராமானுசரும், வங்கநாட்டில் பிறந்த சைதன்னியரும் கன்னட நாட்டில் வந்து தங்கித் திருமாலிடங்கள் தோறும் சென்று நம் அன்பு நெறியைப் பரப்பியர் ஆவர். கன்னட நாட்டிலேயே பிறந்த மாத்துவர், முன்னவர் சீடராகவும், பின்னவர் ஆசிரியராகவும் அமைந்தவர். இம் முப்பெரு வைணவத் தலைவர்கள் தொண்டுக்கும் ஒருங்கே உரிய நாடு கன்னட நாடே
வைணவ இலக்கியத்தின் பெரும்பாலான நூல்கள் விஷ்ணு புராணம், பாகவதம், இராமாயணம் ஆகியவற்றின் மொழி பெயர்ப்புகளும் நாடோடிப் பக்திப் பாடல்களும் ஆகும் பார்த இராமாயணங்கள் சமணர் காலத்தில் பல தடவை மொழிபெயர்க் கப்பட்டாலும் வேத மொழியாளர் (இந்து சமயச்) சார்பாகவும், வைணவச் சார்பாகவும் அவை மீண்டும் பெயர்த்தெழுதப் பட்டன.
12 ஆம் நூற்றாண்டிலேயே உருத்திரபட்டர் என்ற வேதநெறிப் பிராமணர் விஷ்ணு புராணத்தைக் தழுவி 'ஜெகந்நாத விசயம்' இயற்றியிருந்தார். விசயநகரப் பேரரசின புகழ்மிக்க மன்னரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் மகாபாரதத்தின் 18 பருவங்களையும் நாரணப்பா, திம்மண்ணா ஆகிய இருவர் மொழி பெயர்த்தனர். முதல் 10 பருவங்களடங்கிய முற்பகுதியை எழுதிய முதற் புலவர் குமார வியாசர் எனச் சிறப்பிக்கப்பட்டார். இந் நூல் கடக் என்ற நகரில்