உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(282) ||

அப்பாத்துரையம் 44

எழுதப்பட்டதனால் கடகின பாரதம் எனப்படும். பிற்பகுதி நூல் கிருஷ்ணராய பாரதம் என்றழைக்கப்படுகிறது.

கன்னடத்தில் முதல்தர மதிப்புடைய பாரதங்கள் பம்ப பாரதமும், ஜைமினி பாரதமுமேயாகும். பின்னது 18 ஆம் நூற்றாண்டின் தாடக்கத்தில் இலக்குமிசன் என்பவரால் எழுதப்பட்டது. இதில் தலைமையான நிகழ்ச்சி தருமர் குதிரை வேள்வியே (அசுவமேத யாகம்) ஆகும் ஆயினும், பல துணைக் கதைகளும், நாடோடிக் கதைகளும் அதனிடையே இணைக்கப்பட்டுள்ளன. தமிழகம் பற்றிய பல செய்திகளும் இதில் காணப்படுகின்றன. தமிழகத்தின் தென்பகுதியில் பெண்கள் நாடு ஒன்று இருந்ததாக இதில் குறிப் பிடப்பட்டிருக்கிறது. அருச்சுனனின் பாண்டிய நாட்டு மைந்தனான பப்புருவாகனன் மணிப்பூரில் ஆண்டதாகவும், அவன் கையால் அருச்சுனன் முன் வினையீட்டின் (சாபப்)படி மாண்டு கண்ணனால் உயிர்ப்பிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இம் மணிப்பூர் தென் மைசூரிலுள்ள ஒரு நகரமெனக் கன்னட அறிஞர் கருதுகின்றனர்.

கிருஷ்ண தேவராயர் காலத்திலேயே 'தோரவா ராமாயணம்' ஒன்று, ‘குமார வால்மீகி' என்ற புனைபெயருடைய புலவரால் இயற்றப்பட்டது. தோரவா என்பது அந் நூல் எழுதப்பட்ட இடமே ஆகும். 16 ஆம் நூற்றாண்டில் இலக்குவரும் சமணராகிய சாலு வரும் 17 ஆம் நூற்றாண்டில் சுகுமாரரும் வேறு இராமாயணங்கள் இயற்றினர்.

பாகவத புராண மொழிபெயர்ப்பும் பாகவதக் கதை நிகழ்ச்சி களை விரித்துரைக்கும் நூல்களும் எண்ணற்றவை. சாடு விட்டல நாதர் என்ற இயற்பெருடைய ‘நித்தியாத்ம சுகர்’ பாகவத புராண முழுவதையும் மொழி பெயர்த்தார். வேங்கய்யா ஆர்யா பாக வதத்தின் முதல் 10 கந்தங்களையும் சுருக்கி 'கிருஷ்ண லீலாப்புதயம்' என்ற நூலாக்கி அதனைத் திருப்பதியிலமர்ந்த திருமாலுக்குப் படைத்தார். ஆனந்த ராமாயணம், அனுமத் விலாசம், உத்தர ராமாயணம் ஆகிய ராமாயணக் கதை நூல்களும் இக் காலத்தில் எழுதப்பட்டன.

பத்திச் கலைப் பாடல்கள் இக் காலத்தில் எண்ணற்றவை. பெருவாரியாக இவ்வகைப் பாடல்கள் பாடியவர்கள் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தர தாசர், கனக தாசர், 18ஆம்