உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. முதலாளித்துவ சமூக அமைப்பில்

மக்கள் தொகைக் கூறுபாடு

மேலே குறிப்பிட்டபடி முதலாளித்துவ சமூகத்தில் இரண்டு தலைமையான வகுப்புகள் உண்டு. அவை முதலாளி வகுப்பும் தொழிலாளி வகுப்புமாகும். இந்த இரண்டு வகுப்பையும் கார்ல் மார்க்ஸ் தம் பொது உடைமை விளம்பர அறிவிப்பில் (Communist Manifesto) இன்ப வாழ்வினர் (பூர்ஷ்வா - Bourgeoisie) என்றும் உழைப்பாளிகள் (புரோலட்டேரியட் - Proletariat) என்றும் பெயரிட்டுக் குறிப்பிட்டார். சிற்சில இடங்களில் இவ்விரண்டு வகுப்புகளைத் தவிர வேறு வகுப்புகளும் இருக்கலாம். ஆனால் அவை கேடின்றி புறக்கணிக்கத்தக்க அளவுடையவையே.

ன்ப வாழ்வினர் பெரும்பாலும் ஆதாயம், வட்டி, வாடகை ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை நடத்தும் வகுப்பினர். வேறு வகையில் சொல்வதானால் இவ்வகுப்பு உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரரடங்கிய வகுப்பு ஆகும். ஆனால், உழைப்பாளிகளோ எவ்வகையான உற்பத்திச் சாதனங்களு மில்லாதவர்களாய் உழைப்பாற்றல் மட்டும் உடையவர்கள். இவ்வுழைப்பாற்றலை அவர்கள் இன்ப வாழ்வினருக்கு விற்று வாழ்கிறார்கள்.

இவ்விரண்டு வகுப்பேயன்றி மூன்றாவதாகவும் துணை இன்ப வகுப்பு (Lesser Bourgeoisie) என்றொரு வகுப்பு உண்டு. அது சிறு கைவினைத் தொழிலாளர், சுதந்திரக் கலைப் பணியாளர், சிறு பண்ணையாளிகள், வர்த்தகர்கள் ஆகியவர்களடங்கியது. மார்க்ஸ் தம் பொது உடைமை விளம்பர அறிவிப்பில் இதைப் பற்றிக் கூறாது விட்டு விட்டார். அது அவர் கொள்கையில் அவருக்குப் பின்னால் உருவான ஒரு பகுதி.