உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

283

நூற்றாண்டில் வாழ்ந்த வராசு திம்மப்ப தாசர் ஆகியவர்களே. மற்றும் விட்டல தாசர், வேங்கட தாசர், விசய தாசர், கிருஷ்ண தாசர், மாத்துவ தாசர் ஆகிய 'தாச' குழுவினர் பாடல்கள் இத்திறத் தவை. 18 ஆம் நூற்றாண்டினரான சிதானந்தர் இத் துறையில் பிறமொழியாளரும் சுவைக்கத்தக்க' அரிபத்த ரசாயனம்' என்ற இனிய பாடல் நூல் இயற்றினார். இப் பாடல்களுள் ஒன்றில் தெருவில் பொருள்விலை கூறி விற்பவர் பாணியில் பெருமாள் பெயராகிய 'விலையிலாக் கற்கண்டின் புகழ்' கூறப்படுகிறது.

17 18ஆம் நூற்றாண்டுகளில் சைமினி பாரதம் எழுதிய இலக்குமீகனுக் கொப்பான் புகழுடைய சமண சைவ சமயப் பெரியார் இருவர். சமணப் பெரியாரான பட்டா களங்கர் கன்னட இலக்கணத்தை வடமொழியில் சூத்திரமாக்கி வடமொழியிலேயே காண்டிகை விருத்தி உரைகளுடன் வழங்கினார். வீரசைவராகிய சடாட்சர தேவர் விருசபேந்திர விசயம், சபா சங்கர விலாசம் என்ற நூல்களையும், இராசசேகர விலாசம் என்ற கன்னடத்தின் ஒப்புயர் வற்ற பாடற் புனைகதை நூலையும் இயற்றினார். இராசசேகர விலாசத்தின் கதைத் தலைவர், ஞாசம்பந்தர் கதைகளில் இடம் பெறும் சத்தியேந்திர சோழனின் மகனும் அமைச்சன் மகனும் ஆவர். சோழன் மகன் இலங்கை மீது படையெடுத்து இலங்கை அரசன் மகளை மணந்தனன். அவன் வற்புறுத்தலால் அடங்காக் குதிரையேறிய அமைச்சன் மகனது குதிரையினால் ஒரு சிறுவன் மான, அது காரணமாக அரசன் மகனும், அமைச்சன் மகனும், அரசனும், சிறுவன் தாயும் மாள, சிவபெருமான் வந்து அனை வரையும் உயிர்ப்பித்ததாகக் கதை. தமிழ் மனுநீதிகண்ட சோழன் கதையை இது நினைவூட்டுவதாகின்றது.

வைணவ இலக்கிய காலத்தில் சைவம் பற்றி எழுதிய இன்னொரு பேராசிரியர் நிசகுணயோகி ஆவர். இவர் வேதாந்தப் பாடலாகிய பரமார்த்த கீதை, அனுபவசாரம், பரமானுபவ போதம் ஆகிய வற்றையும், நாயன்மார்கள் பற்றிய முச்சீர்ப்பாடல் நூலான 'புராதன திரிபதி'யையும் சிவநெறிப் பேரறிவுக் களஞ்சியமான கைவல்லிய பத்ததியையும் இயற்றினார். பேரறியப்படாத இன்னோராசியரால் முச்சீரிலேயே