உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

285

பட்டுள்ளது. இவை தவிர மைசூர் அரசர் காலத்திலேயே மைசூர் அரசர் வரலாறுகளும், குடகு அரசர் வரலாறுகளும் பல எழுதப்பட்டுள்ளன. இவற்றுட் சில மேனாட்டு வரலாற் றாசிரியர்கட்கு உதவியாயி ருப்பவை.

கிருஷ்ணராய உடையார் காலத்துக்குப்பின் ஏற்பட்ட நிலை யான இலக்கிய மதிப்புடைய மொழிபெயர்ப்புகளுள் நரசிம் மாச்சாரியாரின் தமிழ்த் திருக்குறள், நாலடியார், மூதுரை, நல்வழி ஆகியவற்றின் மொழி பெயர்ப்பாகிய 'நீதி மஞ்சரி' குறிப்பிடத் தக்கது.

8. முடிவுரை

இந்திய மொழிகளில் பரப்பிலும் பழமையிலும் பல சமயப் பெருக்கத்திலும் கன்னட மொழி தமிழ் மொழிக்கு அடுத்தபடியில் உள்ளது. நாட்டிலக்கியம் என்ற முறையில் தமிழிலக்கியம் நீங்கலாகக் கன்னட இலக்கியத்துடன் ஒப்பிடக்கூடிய பகுதி காளிதாசன் காலத்திய வடமொழி நூல்கள் சிலவே.

கன்னடஇலக்கியத்தின் குறைபாடுகள் கீழ்நாட்டு இலக்கியம், இந்திய இலக்கியம் ஆகியவற்றின் பொதுக் குறைபாடுகளே. ஆயினும், தமிழ் பேரளவுக்கும் கன்னடம் ஓரளவுக்கும் இவற்றி டையே தனித்தன்மை பெற்ற இலக்கியங்களே. வடமொழியுடன் ஒப்பிட்டால் இவ்வெல்லா மொழிகளிலும் நாடகத் துறை யில்லாதது ஒரு பெருங்குறைபாடே உரைநடை, வரலாறு ஆகிய துறைகளில் தாய்மொழிகள் மட்டுமன்றி வடமொழியும் குறை பாடுடையதே. புனைகதை, அறிவியல் ஆகியவைகள் புதுத்துறை களாதலால் இனித்தான் இவ்வெல்லா மொழிகளிலும் ஏற்பட வேண்டும் ஆயினும், வடமொழியினின்று மொழிபெயர்த்த கதை இலக்கியம் மற்றெல்லா மொழிகளின் மொழிபெயர்ப்புகளையும் விடக் கன்னடத்தில் இலக்கியச் சிறப்புடையவையாகவே அமைந் துள்ளன. ஒருசில புனைகதை முதனூல்களும் இம்மொழியில் உண்டு. அவற்றுள் ஒன்று விசயநகரப் பேரரசர் காலத்ததாகிய 'தெனாலிராமன் கதைகள்' ஆகும்.

இந்தியத் தாய்மொழி இலக்கியங்களுள் தமிழ் நீங்கலான யாவும் சமய விளம்பரமாகவும் சிறப்பாக வைஷ்ணவ வேத (பார்ப்பன) சமய விளம்பரமாகவும் அமைந்துள்ளன. ஆயினும்,