உலக இலக்கியங்கள்
(289
கண்டெடுக்கப்பட்டுள்ளன. நன்னயனுக்கு முன் ஜைமினி பாரதமென்ற சிறந்த சமய பாரத மிருந்ததாகவும், அதர்வணன் என்ற சமணரால் இயற்றப் பட்டதொரு தெலுங்கிலக்கண நூல் இருந்ததாகவும் அறிகிறோம். தவிர, இலக்கிய காலத்திலேயே உயர் வகுப்பினர், புலவர் ஆகிய வரிடையே வழங்கிய 'மார்க்கி’ இலக்கியத்துடன் கூடவே ‘தேசீ' என்ற வடமொழிச் சார்பற்ற மக்கள் (திராவிட) இலக்கியமும் நிலவிற்று. இவை ஊர்ப்புற நாடகங்கள் (யக்ஷகானம்), நாட்டுப் பாடல்கள் (பாடலு) ஆகிய வடிவில் அமைந்தன. தாலாட்டுப் பாட்டுக்கள் (லாலி பாட்டலு), காதற்பாட்டுக்கள் (ஜாவளிலும்), தொழிலாளர் பாட்டுக்கள் (கூலி பாட்டலு), களியாட்டப் பாடல்கள் (ஆட்டபாட்டலு), பழமொழிகள் (சமிதெலு), கதைப் பாட்டுக்கள் (கதலு) என நாட்டுப் பாடல்கள் பலவகையானவை.
யாப்பு முறையிலும் வடமொழிச் சார்பற்ற யாப்பு முறைகள் தேசீ இலக்கியத்தில் வழங்கின. ஆசிரியப்பா (துவிபதி), நாலடிப்பா (சதுஷ்பதி) ஆகிய திராவிடப் பாமுறைகளை 'வேமனர்' என்ற மக்கட் பெருங் கவிஞர் கையாண்டு அவற்றுக்கு இலக்கிய வாழ்வும் இலக்கியப் பெருமையும் கொடுத்துள்ளார். நன்னயரேகூட பல ‘தேசீப் பாமுறைகளை (தருவாஜம், அக்கரம், சீசம்) திறம்படக் கையாண்டுள்ளனர். இத் தேசீப்பா முறைகள் வடமொழி விருத்தங் களை ஒவ்வாறு தமிழ்ப்பா முறைபோல் மோனை (யதி), எதுகை (ப்ராசம்) உடையவை.
கால அறுதி உடைய தொடக்கக்கால இலக்கியமெதுவும் நமக்குக் கிடைக்கவில்லையாயினும், 9, 10ஆம் நூற்றாண்டு களுக்குரிய கல்வெட்டுக்கள் நமக்குக் கிட்டுகின்றன. இவற்றில் காணப்படும் செய்யுள்களின் நடையால் அவற்றுக்கு முன்பும் இலக்கியம் இருந்தது என்றும், மொழி வடமொழி கலந்த தாயினும், தமிழ், கன்னடத் தொடர்பும் திராவிடப் பண்பும் கடாதிருந்தது என்றும் அறிகிறோம். பேரளவான தமிழ், கன்னடத் தொடர்புடைய தேசீ (தூய தெலுங்கு)ச் சொற்களும் வழக்குகளும் இவற்றில் இருக்கின்றன. தற்காலத் தெலுங்கை ஆந்திரம் என வழங்கும் அறிஞர், இன்றைய தெலுங்கிலிருந்து மாறுபட்ட இப்பழங்காலத் தெலுங்கை 'தெலுங்காந்திரம்' எனக் குறிப்பிடுகின்றனர். பிற்காலத் தெலுங்கில் ‘ட' என எழுதப்பட்ட