அப்பாத்துரையம் - 44
(290) ||__ தமிழ்ச் சிறப்பெழுத்தான 'ழகரம்' (தெலுங்குய) இங்கே பெருக்கமாக வழங்கப்படுகிறது. ஆனால் இலக்கிய காலத்தில் இது அழிந்துபட்டது. மற்றொரு தமிழ்ச் சிறப்பெழுத்தான வல்லின றகரம் (தெலுங்குமு) இன்றுவரை புலவர் நடையிலும் இலக்கியத்திலும் உளதாயினும், பள்ளிக் கல்வியிலும் புதிய எழுத்தாளர் நடையிலும் கைவிடப்பட்டு வருகிறது.
தொடக்கக் காலத்தை விட்டு இலக்கிய காலத்தின் வரலாற்றை நான்கு கூறுகளாகப் பகுக்கலாம். அவை புராண காலம் அல்லது மொழி பெயர்ப்புக் காலம் (12-16 ஆம் நூற்றாண்டுகள்), செயற்கைக் காப்பியகாலம் அல்லது பிரபந்த காலம் (16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்); நலிவுக்காலம் (16-19 ஆம் நுற்றாண்டு நடு வரைக்கும்), தற்கால மறுமலர்ச்சிக்காலம் (1850 (YG) GOTLIGHT.
2. புராண (மொழிபெயர்ப்புக் காலம் 12-16ஆம் நூற்றாண்டுகள்)
நன்னயரின் பாரத மொழிபெயர்ப்புடன் தெலுங்கு இலக்கியம் இலக்கிய உலகில் திடுமெனக் குதித்துவிடுகிறது. எல்லாவிதமான இலக்கியச் சிறப்புக்களும் உடைய இத்தகைய நூல், ஓர் இலக்கியத்தின் தொடக்கத்திலேயே ஏற்படுமா என்ற வினா இங்கே எழுகின்றது. நன்னயருக்கு முன்பே இலக்கிய வளர்ச்சியிருந்து அவ்விலக்கியம் அழிந்துபட்டிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நன்னயருக்கு முற்பட இருந்திருக்கக்கூடும் இலக்கியம் தேசீ நெறியாதலால் அது இம் ‘மார்க்கி’ இலக்கிய வளர்ச்சிக்கு உதவியிருக்க முடியாது. எனவே நன்னயரின் புது முயற்சியின் வெற்றி வேறு வகையில் விளக்கப்பட வேண்டும். 'தெலுங்கிலக்கிய வரலாற்றில்' பி. செஞ்சையா அவர்கள்
கூறுவ தாவது: "மரங்கள் போன்ற உயிர்ப் பொருள்களில் பிறப்பு, வளர்ச்சி, நலிவு ஏற்படக்கூடும். ஆனால், செயற்கையாகக் கட்டப்பட்ட கோபுரத்தில் கட்டி முடிந்த வடிவுக்கு முன்னும் பின்னும் வளர்ச்சி இருக்க முடியாது. வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப் புகுந்த நன்னயர் அம் மொழியிலுள்ள முழு வளர்ச்சியுற்ற காவியத்தை அப்படியே தெலுங்கில் பெயர்த்து வைத்தார்.”