உலக இலக்கியங்கள்
291
தெலுங்கில் பாரதத்தை மொழிபெயர்த்த பெருங் கவிஞர்கள் நன்னயன் (11 ஆம் நூற்றாண்டு), திக்கணர் (13 ஆம் நூற்றாண்டு), ஏறப்ரகதர் (14ஆம் நூற்றாண்டு) ஆகிய மூவர். நன்னயர் அதனை உரையிடையிட்ட பாடல் (சம்பூ) வடிவில் எழுதினார். அவர் நடை எளிமையும் இனிமையும் பொருட் செறியும் உடையது, திராட் சாபாகமானது என்று புகழப் படுகிறது. பிற்காலப் புலவர்கள் அவர் நடையையும் சொல்மரபையும் தலைமேற் கொண்டு பேணினர். இவர் சைவ சமயத்தவராதலால் இலக்கியப்பற்றுடனேயே
பாரதம்
மொழிபெயர்க்கப் புகுந்தார் என்று தோற்றுகிறது. இவர் நூல் முற்றுப்பெறாது பாரதத்தின் 18 பருவங்களில் முதல் மூன்றுடன் நின்றது. இவரை ஆதரித்த அரசன் இராசராச நரேந்திரன் தமிழிலும் கன்னடத்திலும் பாரதம் படிக்கக் கேட்டுத் தெலுங்கிலும் அதனை ஆக்குவிக்க விரும்பினான் என்று அவர் குறிப்பிடுகிறார்.
பாரதம் மொழிபெயர்ப்பவர், அதிலும் சிறப்பாக ஆரணிய பருவம் தொடங்குபவர் கேடுறுவர் என்று புரோகிதர் கருதியதே நன்னயபாரதம் முற்றுப்பெறாததற்குக் காணரம் என்று கூறப் படுகிறது. அதற்கேற்ப நன்னயருக்கு அதை முடிக்குமுன் பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். திக்கணர் ஆரணிய பருவத்தில் நன்னயர் விட்ட இடத்திலிருந்து தொடங்காமல் அடுத்த பருவமாகிய விராட பருவத்திலிருந்தே தொடங்கிப் பதினைந் தாவது பருவம் வரை முடித்தார். திக்கணரைத் தொடர்ந்துவந்த மொழிபெயர்ப்பாளரான ஏறப்ரகதர் இருவர் நடையிலும் தேர்ச்சி பெற்றுத் தமக்கெனப் புதுநடையும் உடையவராதலால் நன்னயர் எழுதியது போலவே. ஆரணிய பருவமுடித்து, திக்கணர் இறுதிப் பகுதியில் அவர் நடையில் எழுதி. இறுதியில் தம் தனிநடையில் எழுதியதாகக் கூறப்படுகிறது.நன்னயர் நடையிலும் இவர் நடை ஓரளவு எளிமை குறைந்தது (கதளீ பாகம்) என்று கூறுவர்.
திக்கணர் தம் நூலின் முகப்பில் அவர் காலத் தகுதியற்ற கவிஞர்களைக் கண்டிக்கிறார். இவருக்குப் பின் இங்ஙனம் கண்டிப் பதும் இதுபோன்ற சில வழக்கங்களும் 'காப்பு' அவையடக்கம்’ போல ஒரு மரபுவழக்காய் விட்டது.திக்கணர் இயற்றிய மற்றொரு