(292
அப்பாத்துரையம் - 44
நூல், நன்னயரது போல உரையிடையிட்டதான நிர்வசனோத்தர ராமாயணம் என்பது ஏறப்ரகதரும் பாரதமல்லாமல் ஹரிவம்சம் ஒன்றும் இயற்றினர்.
நன்னயர், திக்கணர், ஏறப்ரகதர் இம்மூவரும் தெலுங்கின் ‘கவிஞர் மூவர்' 'கவித்திரயம்' எனப்படுகின்றனர். பிற்காலக் கவிஞர்கள் நூன் முகத்தில் இக் கவித்திரயத்துக்கே வணக்கஞ் செலுத்தினர்.
நன்னயர் திக்கணர் ஆகியவர் காலத்தில் இவர்களல்லாது முதன்மையாகக் குறிக்கத்தக்கவர்கள் பலகுரிக்கி சோமநாதர், நன்னெச்சோடு, கோனபுத்தராஜு ஆகியவர்களே. பலகுரிக்கி சோமநாதர் தெலுங்கு முதல் நூலான.பண்டிதாராத்ய சரித்திரம், பசவபுராணம் ஆகியவையும் அனுபவசாரம் என்னும் சமய அறிவுநூலும் இயற்றினார். நன்னெக்சோடு சோழப்பேரரசரின் கீழ் தென் தெலுங்க நாட்டில் ஆண்ட ஒரு சிற்றரசன். அண்மையில் இவர் இயற்றிய 'குமாரசம்பவம்' கண்டெடுக்கப் பட்டுள்ளது. தெலுங்கு இலக்கிய அறிஞர்களால் இது இன்று உச்சிமேற் கொள்ளப்படும் நூல், இதன் மொழிநடையும் சொல் தொகுதியும் பெரிதும் தமிழுடனும் கன்னடத்துடனும் தொடர்பு உடையது. இதனை நன்னயருக்கு முற்பட்ட நூலெனச் சிலரும், அன்றெனச் சிலரும் கொள்கின்றனர். பிந்திய கட்சியினர் இதில் வரும் தமிழ், கன்னடச் சொல்லும் நடையும் அக் காலத்தெலுங்கு நிலையைக் குறிப்பதாகக் கொள்ளாது, தமிழ், கன்னட மொழிகளிலிருந்து கலக்கப்பட்டவை எனக் கூறுவர்.
கோனபுத்தராஜுராயசசீமாவிலாண்ட பிரதாபருத்திரரின் படைத் தலைவர். இவர் இயற்றிய இராமாயணம் மக்கள் மொழியிலும் நாட்டு (தேசீ) நடையிலும் எழுதப்பட்டுள்ளது. இதனை புத்தராஜு பெயரால் ரங்கநாதன் என்ற கவிஞர் இயற்றிய தாகச் சிலர் கூறுவர். தெலுங்கு நாட்டுப் பொதுமக்களிடையே பொதுவாகவும் ராயலசீமாவில் சிறப்பாகவும் எல்லாராலும் பாடிப் பயிலப்படும் மக்கள் நூல் இதுவே. இராமாயணத்தை நாட்டுப் பண்புக்கேற்பத் திராவிட மயமாக்கிய நூல் இது என்று டாக்டர் ஸீ ஆர்.ரெட்டி அவர்கள் பாராட்டுகிறார். தென் இந்தியக் கதைகளும் வாழ்க்கை ஓவியங்களும் இதில் மிகுதி. இராவணன் பாதாள வேள்வி,