உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் - 44

இவ்வகுப்புச் சிறு அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஆதரவு தருகிறது. சிறு அளவான உற்பத்தியைச் சாகடித்துப் பேரளவான உற்பத்தியை விரும்பும் முறையான முதலாளித்துவத்தை அதுவும் ஆதரிக்கவில்லை. ஆனால் அது முற்றிலும் உழைப்பாளி மயமாகி விடவும் விரும்பவில்லை. ங்ஙனமாக அது எப்போதும் நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. "பெருத்த நெருக்கடிக் காலங்களில் அது உழைப்பாளிகளுடன் சேர்ந்து இன்ப வகுப்பினரை எதிர்க்கத் தொடங்குகிறது. இன்ப வகுப்பினர்களை எதிர்க்கும் சக்திகள் முதலாளித்துவ முறையின் அடிப்படையையே தகர்க்கப் போவதாகத் தோன்றியதும், அது கட்சி மாறி, மறுபக்கம் சேர்ந்து கொள்ளுகிறது.

998

துணை இன்ப வகுப்பு அழிந்து கொண்டு வரும் ஒரு வகுப்பு என்று மார்க்ஸும், எங்கெல்ஸும் கருதினர்.

இது அவர்கள் காலத்தைப் பற்றிய மட்டில் உண்மையே. ஆனால் பிற்கால நிகழ்ச்சிப் போக்கு வேறு திசை நாடிச் சென்றிருக்கிறது. தற்போது துணை இன்ப வகுப்பு ஒரு புதிய அரசியல், பொருளியல், முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாஸிஸம் என்ற பெயருள் முதலாளித்துவத்தை மீண்டும் தவிசேற்றி தவிசேற்றி யமைக்கும் முயற்சியிலீடுபட்டு உழைத்தது இந்தப் புதிய துணையின்ப வகுப்பேயாகும். ஆனால், பாஸிஸம் என்பது, அழிந்து கொண்டுவரும் முதலாளித்துவத்தின் கடைசி உருவமெனவே கொள்ளப்படுகிறது. அது சமதர்மம் வரும் நாளைச் சற்றுத் தாமதப்படுத்தலாம், அதனைத் தடுத்து ஒழிக்க முடியாது. இரவுக்குப் பின் ஞாயிறு எழுவதும் அவ்வளவு உறுதியென்று கூறலாம்.