உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

[293

மண்டோதரி, தாரா ஆகியவர்கள் வருணனை இதன் மிகச் சிறந்த பகுதிகள் ஆகும். பிரதாபருத்திரன் என்பவரது நீதிசாரம் அரசனொருவனால் ஆட்சிமுறை பற்றி இக் காலத்தில் எழுதப்பட்ட சிறந்ததொரு நூல். பெத்தணர் என்ற ஆந்திரசோடரும் இதுபோன்று நீதிசாரமுக்தாவளி என்ற ஒரு நூல் இயற்றினார்.

ன்

பதினாலு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் மிகச்சிறந்த புலவர் திருநாதர் (ஸ்ரீநாதர்) என்பவரே, இவர் மூவருடன் ஒப்புடையவராகக் கருதப்படுகிறார். இவர் இயற்றிய சிருங்கார நைடதம் என்ற நூல், தமிழ் நைடதம் போலவே நைடதம் புலவர்க் கௌடதம்' என்ற வடமொழி நைடதப் புகழுக்குப் போட்டியாய் அமைந்துள்ளது. சிருங்கார தீபிகை என்ற யாப்பணி நூலும், காசிகாண்டம் முதலிய நூல்களும் இவரால் எழுதப்பட்டன.

பல்நாட்டி வீரசரித்திரம் என்று நாட்டுப்பாடல் தொகை நூல் ஒன்றும், விதிநாடகம் என்ற நாடகமும் திருநாதராலேயே எழுதப் பட்ட தெனக் கொள்வர் சிலர். ஆனால், முன்னது ராயலசீமாவில் இயற்றப்பட்ட ‘தேசீ' நெறிப் பாடல்கள் என்று தோற்றுகிறது.கோனபுத்தர் இராமாயணம், வேமனர் பாடல்கள் ஆகியவற்றுடன் அது பொதுமக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளது.

கவிஞர் மரபில் இக் காலத்தில் பீமகவி என்ற முதல் தரக் கவிஞர் இருந்ததாக அறிகிறோம். பல நூல்கள் அவர் பெயரால் இயங்குகின்றன வாயினும், எவை அவருடையன என்று உறுதிகாண முடியவில்லை. இவற்றுள் இராமாயண பாரத மிரண்டுக்கும் பொருந்தும் படியான தொடர் சிலேடை நூலான

ராகவ பாண்டவீயம், சதகண்ட ராமாயணம், சிவபுராணங்கள் ஆகியவை உள்ளன. சமண கோமட்டியான ராசண்ணா எழுதியதாகக் குறிக்கப்படும் கவிஜனாசிராம் என்ற நூலும் அவர் இயற்றிய தென்பர்.

தெலுங்கின் சிறந்த பக்தி காவியம் போதனர் இயற்றிய பாகவதமே. இவர் ஐதராபாதில் தற்காலம் வாரங்கல் என்று வழங்கும் ஓர் கல்லு நகரம் என்ற பழம்பதியில் பிறந்தவர். இராமாயண பாரத மொழிபெயர்ப்புக்கள் முதனூலைவிடச்