உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 44

உள்ளது.

(294) || கருங்கியிருக்க, இது முதனூலினும் விரிவாய் வடமொழிக் கலப்பு மிகுதியேயாயினும் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கதாய் இருப்பதனால் அவற்றினும் மக்களால் விரும்பிப் பாடப்படுகிறது. கஜேந்திர மோட்சம், உருக்குமணி கலியாணம் ஆகியவை பெருக வழங்கும் பகுதிகள்.

மருட்கைச்சுவை நிறைந்த போஜராச்சியம் என்ற கதை நூலும், கௌரண்ண மந்திரியின் நவநீதசரித்திரம் என்னும் சிறுகதை நூலும் வடமொழி கணித நூல்களான லீலாவதி, மகாவீராசாரியரின் கணிதநூல் ஆகியவற்றின் செய்யுள் மொழிபெயர்ப்புகளும் இக் காலத்துக்குரியன.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பில்லை மரபின வீரபத்ரையா பல நூல்கள் எழுதியதாகக் கூறப்படினும் ஜைமினி பாரதம், சிருங்கார சாகுந்தலம் இரண்டுமே இன்று மீந்துள்ளன. இவர் கலை மகளையே காதலியாகக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.கலைமகள் என்ற பெயருடைய புலமையுடைய ஒரு மாதின் காதலில் இவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று இதனை இன்றைய அறிஞர் கொள்கின்றனர். இவர் எளிய இனிய கவிதை இயற்கை நயம் உடையது.

3. செயற்கைக் காவியம் அல்லது பிரபந்த காலம் (16-17ஆம் நூற்றாண்டுகள்)

விசயநகரப் பேரரசர் தமிழ்நாடு, தெலுங்குநாடு, கன்னடநாடு ஆகிய மூன்று பகுதிகளையும் ஆண்டவர்கள். மும்மொழி இலக்கிய த்தையும் அவர்கள் ஆதரித்தனர். ஆயினும், தெலுங்கிலக்கியமும் வடமொழியுமே அவர்களால் சிறக்க ஆதரவுபெற்றன. இரண்டாம் கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் தாமே ஒரு கவிஞராயிருந்து பிற கவிஞர்களை ஆதரவு செய்தனர். அவர் எழுதிய காவியம் ஆமுக்த மால்யதம் அல்லது விஷ்ணு சித்துயம் என்பது. விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் புதல்வி நாச்சியார் திருவரங்கத்து அரங்கப்பெரு மானை விரும்பி மணந்த கதையே இது. இது சொல்லணிச் சித்திரம் நிறைந்த கடுநடை வாய்ந்தது. ஆயினும், இது பொருளாழமுடைய கருத்துக்கள் நிறைந்தது.