(296
அப்பாத்துரையம் - 44
பொருள் வறுமையுமுடைய அய்யல ராஜுராமபத்திரகவி ஒரு புலவர் இடையீட்டின் மூலம் அரசனரையடுத்துப் பல புராணக் கதைகள் அடங்கிய சகலகதா சாரசங்கிரகம் என்ற நூலை இயற்றினார்.
தூர்ஜடி என்ற சைவப் புலவரால் கானஹஸ்தி மகாத்மியமும், மல்லணரால் ராஜசேகர சரித்திரமும் எழுதப்பெற்றன. சங்குசல நிருசிம்ம கவி என்பவர் அல்லசானி பெத்தண்ணாவின் பொறாமை யினால் அரசனையடைய முடியாமல் தம் கவிகர்ண ரசாயனம் என்ற நூலின் பாக்களை விலைகூறி விற்றனர் என்றும், அரசன் மகள் மோகளாங்கி அதனை வாங்கி அரசன் முன் பாடிப் புலவரை ஆதரிக்கத் தூண்டினள் என்றும் அறிகிறோம். குமாரி தூர்ஸ்ரீடியின் கிருஷ்ணதேவராய விஜயம் அப்பேரரசர் வெற்றிகளைப் புகழ்வது.
கிருஷ்ணராசருக்குப் பின்னிருந்த புலவர்களில் பிங்களி சூரண்ணா, ராமராஜ பூசணர், தெனாலிராம கிருட்டினர் ஆகியவர்ள் முக்கிய மானவர்கள். சூரண்ணாவின் ராகவ பாண்ட வீயம் ராமாயண பாரதக் கதைகளை ஒரே தொடர் சிலேடையாகக் கூறும் திறத்தது. கவிதைச் செப்படி வித்தையாகிய இந்த துவந்த காவியம் உண்மையில் எளிய நடையில் அமைந்திருப்பது பின்னும் வியக்கத்தக்கது. அவரது காலபூர்ணோதயம் இந்திய இலக்கியத்தி லேயே அரிதான கதைப் புதுமை உடையது. கதைப் போக்கு உருவ ஒற்றுமையுடைய இருதிறக் காதலர் உருவ மயக்கத்தால் அமையுங் குழப்பதைப் பற்றியது. இவரது இறுதிக் காவியமாகிய பிரபாவதி பிரத்யும்னா இவரது தலைசிறந்த நூல் இதில் கதை புதிதன்றாயினும் நடை புதிது. கதையியக்கம் குறைந்த காவிய முறையில் நாடகப் பண்பு மூலம் இவர் வளர்ச்சியூட்ட விரும்பியவர்.
பூஷணரின் ‘வாகசரித்திரம்' பெத்தண்ணாவின் மனுசரித்தி ரத்தையும் விஞ்சியதென அக் காலத்தில் கருதப்பட்டது. அவர் கதை புராணத்தில் கட்டுப்படவும் செய்யாமல் புதிதாகவும் அமையாமல் புராமணத்தில் நுட்பமாகக் கூறப்பட்ட பகுதியை மனம்போல விரித்துரைக்கப்படுவது. இவரும் எளிய நடையில் சிலேடையமைப் பதில் வல்லவர். பிங்களி சூரண்ணாவின் கதை யொழுக்குக்கு மாறான இவரது சிக்கலான விரிவுரை இவர்