உலக இலக்கியங்கள்
உ
[297
நடையைத் தடைப் படுத்துகிறது. ஆயினும் கவிதைப் படைப்பில் இவர் நூல் மிகவும் உயர்வுடைய கற்பனைமணியாகவே கொள்ளத்தக்கது. இவரது ஹரிச்சந்திர நளோபாக்கினியானம் அரிச்சந்திரன் நளன் ஆகிய இருவர் கதைகளையும் சிலேடையில் கூறும் துவந்துவ காவியம் ஆகும்.
தெனாலிராமகிருட்டிணர் பெயர் ஒரு விகடகவியாக மக்களிடைக் கதையில் வழங்குகிறது. ஆயினும், அவர் உயர்ந்த கவிஞராகவே இருந்தார். அவர் சிறந்த காவியம் பாண்டுரங்க மகாத்மியம் என்பது அப்பைய தீட்சதர் (சைவர்), தாத்தாச்சாரி (வைணவர்) ஆகிய இருவரும் இவர் காலத்தவர். இவர் விகட முற்றும் தாத்தாச்சாரியை எதிர்த்தடக்குவதில் பயன்படுத்தப் பட்டதே. பக்தியை இவர் மதித்தாலும் சமயவெறியையும் சமய வேடத் தையும் வெறுத்தவர்.
4. நலிவுக்காலம் (17-18ஆம் நூற்றாண்டுகள்)
1565 இல் தலைக்கோட்டைப் போரில் விசயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பேரரசர் ஆதரவு தெலுங்கிலக்கியத்துக்கு அதன்பின் ஏற்படமுடியாது போயிற்று சிற்றரசர்களும் போர்களால் நலிவுற்றனர். செல்வர் ஆதரவு மட்டுமே மீந்தது. இலக்கணப் புலவரும் அணி அலங்காரப் புலவர்களும் தலையோங்கிக் காவிய வளர்ச்சி மிகவும் தடைப்பட்டது. அதனுடன் ஆதரவின்றி மாண்டது. எனவே, இக் கால இலக்கிய நூல்கள் இரண்டாந்தரமானவை யாகவும் புராணக்கதைகளை மறித்துப் புரட்டி எழுதப்வை யாகவுமே அமைந்தன.
பிரபந்த காலத்திலுள்ள துவந்துவ காவிய முறை இப்போது பரலால் மேற்கொள்ளப்பட்டது. இக் காலத்தில் தொடங்கப் பட்ட இயக்கங்களில் தூய தெலுங்கியக்கம் குறிப்பிடத்தக்கது. தூய தெலுங்கில் ஒன்றிரண்டு பாட்டுக்கள் எழுதிக் காட்டும் வழக்கம் இதற்கு முன்பே இருந்தது. அவ்வப்போது சிதைவுறாத வடமொழிச் சொற்களை நீக்கி எழுதுவதும் உண்டு. ஆனால் தூயநடை இயக்கத்தார் இதோடு நிற்கவில்லை. அவர்கள் கூடிய மட்டும் வடமொழிச் சொற்களை முற்றிலும் விலக்கி எழுத முனைந்தனர். இத்தகையோருள் தலைசிறந்தவர் ‘பொன்னிகண்டி தெலகனார்யா' என்பவர். ஐந்து காண்டங்களடங்கிய அவரது