உலக இலக்கியங்கள்
(299
உரைநடைநூலும் படைத்தலைவன் (சாமந்த) கிருஷ்ணப்ப நாயக்கன் உரைநடை ஜைமினி பாரதமும் இயற்றினர். இந்த ஜைமினி பாரதம் தெலுங்கின் உயர்ந்த உரைநடை நூல்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது.
புதுக்கோடைப் பகுதியில் தெலுங்கின் முதல் அகரவரிசை யாகிய ஆந்திர பாஷார்ணவமும் பில்கணீயமும் இயற்றப்பட்டன.
தமிழகத் தென் தெலுங்கிலக்கியத்தில் 'தமிழ் விறலி விடு தூது' போன்ற சிற்றின்ப ஆபாசம் நிறைந்த கவிதை மிகுதி.
தமிழகத் தெலுங்கிலக்கியத்தின் இன்னொரு தனிப்பண்பு நாடகங்கள் மிகுதி எழுதப்பட்டதே. உரைநடை போல இவை உச்சநிலையடையவில்லை. இதற்குக் காரணம் மக்கள் நாடக வாழ்வுடன் அவை இணையவில்லை என்பதே. தெலுங்கு நாட்டில் உள்ள ஒருசில நாடகங்களுக்கும் இதே முடிபு அமையும்.
தெலுங்கிலக்கியத்தில் நாட்டு வாழ்வுடன் நெருங்கிப் பரந்த
தொடர்புடையது தேசி இலக்கியமே. இதில் துவிபதம், சதகம் இசைப்பாட்டு ஆகிய துறைகள் இடம் பெற்றன. கேரளராஜுவின் இராமாயணம் போலத் திம்மலகவியின் பாரதமும், கோனேரி கவியின் பாகவதமும் பல்நாட்டி வீர சரித்திரமும் துவிபதமாக எழுதப்பட்டன. சதகங்கள் 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டுவரை பெருக்கமடைந்து கொண்டே வந்தன.பத்தி, அறிவுரை, நகைச்சுவை ஆசிய சார்புகளுடன் தெலுங்கில் 600 சதகங்களுக்குமேல் உள்ளன. பலகுரிகி சோமநாதரால் (1180) இயற்றப்பட்ட விருஷாதிய சதகமும் பெத்தணரால் இயற்றப் பட்டதாகக் கருதப்படும் சுமதி சதகமும் இவற்றுள் முக்கிய
மானவை.
தெலுங்கு நாட்டின் ‘மக்கட் கவிஞன்' ஆனவரும் ஒப்பற்ற கவிகுலதிலகமும் ஆனவர் வேமனர். இவர் பிறப்பிடம் காலம் எதுபற்றியும் நாம் ஒன்றும் அறியக்கூடவில்லை. ராயலசீமாவி லுள்ள கொண்டவீடு அவர் பிறப்பிட மென்றும் 15 ஆம் நுற்றாண்டில் அவர் வாழ்ந்திருக்கலாம் என்றும் ஊகிக்கப் படுகிறது. இவர் பட்டினத்தடிகள் போன்ற பற்றற்ற துறவி. சமயங்கடந்த ஞான முடையவர் மக்களன்பிலும் நடுநிலை நெறியிலும் பிறழாதவர். இவர் பாட்டு ஒவ்வொன்றும்