உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




300

அப்பாத்துரையம் - 44

பாட்டினுள்ளேயே எடுத்த கருத்தை முடித்துவிடும். இவர் இயற்றிய வேமன சதகம் அனுபவங்களின் திரட்டான ஒப்பற்ற அறிவுநூல். அதேசமயம் அது ஒப்பற்ற இலக்கிய மாணிக்கம், திருவள்ளுவர், கன்ஃபூசியஸ் முதலிய உலக அறிஞர் உரைகளுடன் அவற்றைப் பல விடங்களில் ஒப்பிடலாம்.

பாட்டும் இசைப்பாடலும் கலந்துறழ்வன போன்ற நீண்ட பாக்கன் தண்டகங்கள் ஆகும். மோனை எதுகை நயம் நிறைந்து இறுதியில் வணக்கம் நீதி அடங்கிய இத்தகைய தண்டகங்களும் தெலுங்கில் உண்டு.

5. தற்காலம் அல்லது மறுமலர்ச்சிக்காலம் (19-20ஆம் நூற்றாண்டுகள்)

இலக்கியம் மக்கள் வாழ்விலிருந்து தொடர்பற்று இயற்கை யூற்றையிழந்து நான்கு நூற்றாண்டுகள் தடுமாறிய பின் 1896 இல் அச்சகச் சாலை ஏற்பட்டதும் மேனாட்டு இலக்கியக்கருத்துக்களின் பயனாக, அது மீண்டும் தளிர்த்துத் தழைக்கத் தொடங்கிற்று. தொடக்கத்தில் கல்வியும் ஆராய்ச்சியும் மொழித்துறை, இலக்கியத் துறை விவாதங்களும் பின் புத்திலக்கியங்களும் தோன்றலாயின. பழநூலராய்ச்சியாளர் வழங்காது இழக்கப் பட்ட நூல்களைக் கூடியமட்டும் தேடிக்கண்டெடுத்து வருகின்றனர்.

என

தற்காலத் தெலுங்கிலக்கியத்தின் தந்தை மதிக்கப்படுபவர் கந்துகூறி வீரேசலிங்கம் பந்துலு ஆவர். தற்கால இலக்கியத் துறைகளில் அவர் முன்னணியில் நிற்காத துறையே யில்லை என்னலாம். தெலுங்கிலக்கியத்துக்கு அவர் செய்த பணிகளுள் முதன்மையானது அவரால் திறம்பட ஆராய்ச்சி யுடன் எழுதப்பட்ட தெலுங்குக் கவிஞர் வரலாறு (ஆந்திர கவுலா சரித்திர) நூலேயாகும். பழங்கதைகளுடன் பயன்தரும் பல செய்திகளும் நிறைந்த இது போன்ற மற்றொரு நூல் குரு ஜாத ஸ்ரீராமமூர்த்தியின் கலிஜீவிதமுலு என்பதாம். வங்கூறி சுப்பாராவினால் தெலுங்கிலக்கிய வரலாறு (ஆந்திர சரித்திரம்) ஒன்றும் எழுதப்பட்டுள்ளது. இதே ஆசிரியர் களால் மக்கள் வழக்கிலுள்ள பாடல்களும் சதகங்களும் திரட்டப் பட்டுள்ளன. ஆர். சேஷகிரிராவ், கிடுகு ராமமூர்த்தி முதலிய அறிஞர் தமிழ்