5. முதலாளித்துவத்தின் அடிப்படை
தொழிலாளிகளைச் சுரண்டி வாழ்வது முதலாளி த் துவத்தின் உள்ளார்ந்த பண்பு: அதன் அடிப்படையே அது தொழிலாளர்களைச் சுரண்டுவதென்பது இல்லாவிட்டால் அது ஒரே நாளில் வாடி அழிந்துவிடும்.
முதலாளிகள் உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாகக் கைக்கொண்டு, உற்பத்தித் தொழிலை நடத்தத் தொழிலாளி களிடம் வேலை வாங்ககின்றனர் என்பது சமதர்மிகள் வாதம். இத்தொழிலாளிகள் தம் முயற்சியாலும் உழைப்பாலும் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் உற்பத்தியாளர் செய்வது யாதெனில் உற்பத்தியான இச்செல்வத் தில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தொழிலாளிகளுக்குக் கொடுத்து மீதியைத் தமக்கே வைத்துக் கொள்ளுகின்றனர்.
இங்ஙனம் முதலாளிகள் சுரண்டி வாழ்வதன் மூலம் நாளொரு மேனியாகக் கொழுந்து வரவரச் செல்வமிக்கவர்களாக வளர்கின்றனர். இவ்வகையில் முதலாளித்துவம் “சமூகத்தில் பல்வேறு தனி மனிதர்களின் செல்வ நிலையில் மிகுதியான ஏற்றத் தாழ்வு ஏற்படுத்துகிறது. ஒருபுறம் விதையாவது கதிரறுத்துக் குவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாது சோம்பேறிகளாக வாழும் ஒரு பணக்கார வகுப்பையும், மற்றொருபுறம் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு இரவு பகலாய் உழைக்கும் ஏழை உழைப்பாளி வகுப்பையும் அது உண்டு பண்ணுகிறது. தம் உழைப்பிற்கு ஊதியமாக இவ்வேழை வகுப்புக்குக் கிடைப்ப தெல்லாம் வாரக் கூலிதான். இது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்கக்கூடப் போதியதாயிருப்பதில்லை. முட்டுப்பட்ட காலங்களில் இதுகூட முடியாத காரியமாய் விடுகிறது. பொருளியல் நெருக்கடிக் காலங்களிலோ தொழிலாளிகள் வேலையில்லாதவர்களாய் தெருக்களில் திரிய