உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. வடமொழி இலக்கியம்

1. வடமொழியின் தனிச் சிறப்புக்கள்

வழக்காற்ற உயர்தனிச் செம்மொழிகளிடையே உலகின் முதன்மையான மூன்று மொழிகளுள் வடமொழி ஒன்றாய் ஒளிபெறு கின்றது. அதனோடொத்த மற்ற இரு மொழிகள் பண்டைய மேனாட்டு மொழிகளாகிய கிரேக்கமும் இலத்தீனமுமே. இம்மூன்றனுள்ளும் கூட, கிரேக்க மொழியுடன் ஒத்த சிறப்பு வடமொழிக்குத் தரப்பட்டுள்ளது.

வடமொழி சொல்வளமும் பொருள்திட்பமும் ஓசைநயமும் பெருமிதநடையும் உடையது. அதன் இலக்கியம் அளவிலும் பண்பிலும் உலக இலக்கியங் களிடையே கிரேக்க மொழியுடன் போட்டியிடத் தக்க பண்டைச் சிறப்புடைய தாய் விளங்குகிறது. நாடகத் துறையிலும் இலக்கண ஆராய்ச்சியிலும், அணியியல் அல்லது இலக்கிய ஆராய்ச்சித் துறையிலும் அது உலக லக்கியத்தி லேயே முனைத்த பங்குகொள்வதாயுள்ளது. உணர்ச்சிப்பாத்' துறையில் வடமொழி இலக்கியத்தின் அளவு குறைவாயினும் உலகின் மிகச்சிறந்த இலக்கியத்துடன் பண்பில் ஒப்பிடத்தக்கதா யிருக்கிறது.

2. வேதமொழியும், வடமொழியும்

வேதமொழி, சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளும் இன்று வடமொழி என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. ஆயினும் வட மொழியாளர் வேத மொழியைச் சமற்கிருதம் என்றோ, வேதமொழி நூல்களை இலக்கியம் (ஸாஹித்யம்) என்றோ அழைக்கவில்லை; வேத மொழி (வைதிகீ) என்றும் சமய நூல்கள் (சாஸ்திரங்கள்) என்றும் மட்டுமே குறித்தனர். கால, தேச, இனத் தொடர்பு நோக்கி இவ் இரண்டையும் கோவைப்படுத்தல்