உலக இலக்கியங்கள்
305
பாணினியின் இலக்கணம் வேதமொழியினடிப்படையில் அமைந்த தனாலும், ஆரியர் கிழக்கே செல்லச்செல்லப் பேச்சு மொழி ஒருபுறமும் இலக்கியமொழி மற்றொருபுறமும் ஆக இருவேறு திசைகளில் வளர்ச்சி பெற்றதனாலும், கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குள் பேச்சுமொழி பாகவதங்களாகவும்,பாணினியின் இலக்கண அடிப்படையில் வளர்ந்த புதிய இலக்கிய மொழி சமற்கிருதம் ஆகவும் பிரிந்தன. சமற்கிருதம் பிறப்பிலேயே பேசப் படாத செயற்கை மொழியாயிருந்ததன் காரணம் இதுவே.
4. வடஇந்திய மொழிகளும் ஆரியமும்
வேதமொழி, வடமொழி உட்பட வடஇந்திய மொழி களனைத்தும் இந்திய ஆரிய மொழிகள் எனப்படும். இந்தியா முதல் ஐஸ்லாந்து வரை பரந்துள்ள பத்து நூற்றுக்கணக்கான ஆரிய மொழிகளிடையே இவை ஒரு பகுதியேயாகும். இந்திய ஆரிய மொழிகளிடையே ஆரிய மொழிகளனைத்துக்கும் அடிப் படையான பல ஆதி ஆரியச் சொற்களும் கருத்துக்களும் பண்பாடுகளும் உண்டு. அதேசமயம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொது வான பல சொற்களும் பண்புகளும் கருத்துக்களும் உண்டு. இவற்றைப் பகுத்துணராமல் பலர் இந்திய ஆரிய மொழிகளில் கண்ட தெல்லாம் ஆரியமாகவே இருக்க வேண்டும் என்று கண்மூடி நம்பி வருகின்றனர்.
வடமொழி வேதமொழி ஆகியவற்றிலில்லாத தேசிச் சொற்கள் இன்றையத் தாய்மொழிகளில் உண்டு. இவை ஆரியருக்கு முற்பட்ட இந்தியப் பழங்குடியினங்களின் சொற்களாகவே இருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை. இவற்றில் சிலவும் வடமொழி வேத மொழிகளின் சொற்களில் சிலவும் திராவிடச் சொற்களே என அறிஞர் காட்டுகின்றனர்.
தவிர இதிகாச புராண காலங்களில் சிந்து நாடே ஆரிய பூமியாகவும், சிந்து, சரஸ்வதி ஆறுகளே புண்ணிய ஆறுகளாகவும் இருந்தன. இக் காலச் சமய நூல்களிலும் இலக்கணங்களிலும் கங்கைநாட்டு ஆரியத்தைக் கலப்பாரியம் என்றும் போலி ஆரியம் என்றும் கண்டித்தும் இழித்துரைத்தும் உள்ளனர். ஆனால்
மொழிக் காலத்துக்குள் கங்கைநாடே (சிறப்பாகக் கங்கை யமுனை இடைநாடே) ஆரிய அல்லது புண்ணிய பூமியாகவும்,