(306) ||
அப்பாத்துரையம் - 44
கங்கையே புண்ணிய ஆறாகவும், இந் நாட்டில் வளர்ந்த இலக்கிய மொழியே சிறப்பான ஆலிாய மொழியாகிய வடமொழி (சமற்கிருதம்) ஆகவும் மாறின. தூய்மை மிகுந்த அல்லது கலப்புக் குறைந்த ஆரியமாகிய மேற்கு ஆரியம் புகழ் மங்கி மறைந்து தூய்மை குறைந்த அல்லது கலப்புமிகுந்த ஆரியமாகிய கங்கை நாட்டாரியப் பண்பாடும் மொழியுமே இன்றுவரை ஆரியப் பண்பாடும் மொழியு மாக இந்தியா வெங்கும் வழங்குகின்றது.
மேற்கூறியவற்றால்
வேதமொழியிலும்
பிற்கால வேதமொழியும், அதனினும் வடமொழியும் திராவிடக் கலப்பு மிகுதியுடையவை என்பது போதரும். திராவிடப் பண்புகள் மேன்மேலும் மேம் பட்டதனாலேயே தாய்மொழிகள் ஒரு சில நூற்றாண்டுக் கொரு முறை உருமாறி வந்துள்ளன. அவற்றில் இலக்கிய இலக்கண வாழ்வு இல்லாத காரணத்தாலேயே அவை காலத்துக்குக் காலம் ஒரே படிமுறையில் மாறுபடுவதன்றி இடத்துக்கிடமும் மாறுபட்டுப் பல மொழிகளாயுள்ளன. வாழ்க்கைத் தொடர்பற்ற செயற்கை மொழியாகிய வடமொழி யால் அவற்றைப் பிணைக்க முடியாது போயிற்று.
வடஇந்திய ஆரியமொழிகள் ஆரிய அடிப்படையில் அமைந்த இந்திய (திராவிட) மொழிகளே என்பது இன்று தெளிவாக உணரப்படவில்லை யாயினும் எதிர்காலத்தில் நடுநிலையாராய்ச்சி இதனை வலியுறுத்திக் காட்டுவது உறுதி. உண்மையில் இந்தியா வருமுன்னரே கூடப் பாரசீகநாட்டிலேயே திராவிட ஆரியப் போராட்டமும் கலப்பும் தொடங்கிவிட் தென்னல் கூடும். பாரசீக ஆரியர்களின் தேவர் அகரராசுவும் அசுரர் தேவராகவும் கருதப்படும் முரண்பாடு இதற்குச் சான்று ஆகும்.
5. வடமொழியின் திராவிடத் தமிழ்ப் பண்பாடுகள்
வடமொழியின் சொற்களில் நூற்றுக்கு 80-க்கு மேற்பட்ட சொற்கள் ஆரியத்திற்குரியனவல்லவென்று திண்ணமாகக் கூறலாம். ஏனெனில் உலகில் இந்தியாவுக்கு வெளியேயுள்ள நூற்றுக்கணக்கான ஆரிய மொழிகளுடன் தொடர்புடைய பொதுச்சொற்கள் மட்டுமே ஆரியத்துக்கு உரியவை ஆகும். மேலும் ஆரியருக்கு முற்பட்ட உயர் நாகரிகம் திகழ்ந்த