உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




308

அப்பாத்துரையம் - 44

வேதங்களில் யகர்வேதமும் பிராமணங்களும் உபநிட தங்களில் சிலவும் உரைநடையிலுள்ளன. உலகின் மிகப்பழமை யான உரை நடை என்று சிறப்பு இவற்றுக்கு உண்டு. ஆரணியகங்களும் உபநிடதங்களும் ஆரியப் புரோகிதருக்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பியக்கங்களைச் கருங்கிய அளவில் படம் பிடிப்பதாகும். பாரசீகத்தில் ஜர துஷ்ட்ரர் சீர்திருத்த இயக்கம் இதற்கு முன்னோடி யாகவும், இன்றுவரை தமிழ் நாட்டில் இயங்கும் தமிழ் இயக்கம் இதன் பின்னோடியாகவும் கொள்ளத்தக்கன. இவை இலக்கியமல்ல வாயினும் இலக்கிய அறிஞர்களால் வடமொழி யிலக்கியத்திலே காணக்கிடையாத எளிமையும் அறிவுத் திறமும் உடையவை.

7. 'கதம்ப நூல்கள்

பாரதம் 5000 பாடலில் தொடங்கி 100,000 பாடலாக விரிவடைந்த ‘காலங்கண்ட' நூல். இதனை ஒரு புலவர் ஒரு காலத்தில் எழுதினார் என்பதில்லை. ஆயிரக்கணக்கான பேர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எழுதிச் சேர்த்துக் கூட்டியும் குறைத்தும் திரித்தும் வளர்த்த கதம்பம் இது. வேதங்களுக்குப் பிற்பட்டு 5 ஆம் நூற்றாண்டு வரையுமுள்ள எல்லா நூல்களுக்கும் இப் பண்பு பொருந்துவதாகும். புராணங்கள் சுமிருதிகள் இவ் வகையில் இதிகாசங்களைவிடச் சீர்கேடுடையவையாகும். பதினெண் புராணங்களில் சேராவிட்டாலும் அவற்றிலும் புகழடைந்துள்ள பாகவத புராணம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது.

இராமாயணம் ஒன்றுதான் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் ஒரே புலவனால் இயற்றப்பட்ட பிற்கால வேதமொழி நூலாகும். இதில்கூட முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் பின்னால் சேர்க்கப்பட்டன என்று தெரிகிறது. தவிர, கிடைக்கும் பதிப்புக்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. நூலினுள்ளேயே கூறப்பட்ட செய்யுள் தொகை, இயல் தொகை நூலுடன் ஒத்துவரவில்லை. ஆசிரியராகிய வால்மீகியின் கதையும், அவர் பாடல்களாகச் சிலவும் நூலில் வருவதிலிருந்து முற்கால வால்மீகி வேறு இன்றைய இராமாயண வால்மீகி வேறு என்ற அறிகிறோம்.

ன்றைய இராமாயண வால்மீகி, கி.மு. 2ஆம் நூற்றாண்டில் இருந்தவர். ஏனெனில், அந் நூற்றாண்டிலேயே கோசலத்தின்