உலக இலக்கியங்கள்
(309
பழைய தலை நகரான சாகேதத்தைப் புஷ்யமித்திரசுங்கன் என்ற மன்னன் தன் தலைநகரமாக விரிவுபடுத்தி அதற்கு 'அயோத்யா’ (வெல்லப்பட முடியாத நகரம்) என்று புதுப்பெயர் கொடுத்தான். இந் நகரே இராமன் ஆண்ட நகரமாக
இராமாயணத்தில் புனைந்து ரைக்கப்படுகிறது.
வால்மீகி
இலக்கிய காலத்துக்கு முற்பட்டவராகக் குறிக்கப்படும் ஆசிரியர்களுள், மூவர் நூல்கள் ஆராய்ச்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்படாதவையாயுள்ளன. ஒன்று பரதர் நாட்டிய சாஸ்திரம். இன்றைய வடிவில் அது கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பதில் ஐயமில்லை. ஆனால், இது தொடக்கத்தில் து 36 செய்யுள் களாயிருந்து 37 இயல்களாகிப் பெருகிய நூல். இன்று இதுரு தென்னாட்டிலேயே வழக்கிலும் உள்ளது. முதலாசிரிய ராகிய பரதமுனிவர் கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குரியவர் எனக் கூறப் படுகிறது. இதுபோன்ற மற்றொரு நூல் சாணக்கியனின் ஆர்த்த சாஸ்திரம். சாணக்கியன் சந்திரகுப்தனின் அமைச்சன் என்று கூறப்படுகிறான். அப்படியாயின், இது கி.மு. 4ஆம் நூற்றாண்டுக் குரியதாகவேண்டும். ஆனால், சந்திரகுப்தன் காலத்தில் அவன் அவைக்கு வந்திருந்து இந்தியாபற்றி எழுதிய மெகஸ்தனிஸ், இவரைப்பற்றி ஒன்றும் குறிக்கவில்லை. முதன்முதலில் இவரைப் பற்றிய வரலாறு கி.பி. 8ஆம் கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குரிய முத்ராராக்ஷஸ நாடகத்தில் தான் குறிக்கப்படுகிறது. நூலின் நடையும் பிற்காலத்தது. இக் காலத்த தென்று கருதப்படும் மற்றோர் ஆசிரியர் பாஸன். காளிதாசன் பாஸனைப் பற்றிக் குறிப்பிடுவதால் இவன் காளி தாசனுக்கு முற்பட்டவன் என்பதில் ஐயமில்லை. ஆயினும், இவன் கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டின னாகவே இருத்தலும் கூடும். அண்மையில் அறிஞர் டி. கணபதி சாஸ்திரியால் திருவனந்தபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட 13 நாடகங்களும் பல காரணங்கனால் பாஸனுடையவை என்று சிலரும், அன்று என்று வேறு சிலரும் வாதாடுகின்றனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மலையாள நம்பூதிரிகளால் எழுதப்பட்டவையே இவை என்பர் சிலர். எப்படி யாயினும் இது கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக் குரியவையல்ல வென்பதை இந் நூல்களின் நடையும் கருத்துக்களும் அவற்றின் தென்னாட்டு நாடக மரபுகளும் காட்டுகின்றன. வடநாட்டில்
ய