310
||--
அப்பாத்துரையம் - 44
புத்த சமய நலிவுக்குப் பின் தோன்றிய புராணக் கருத்துக்கள் தென்னாட்டில் சங்க காலங்களிலிருந்தே காணப்படுகின்றன. ஆகவே, அவை தென்னாட்டு நூலாகக் கொள்ளப்பட லாமானால் கி.பி. 2-9ஆம் நூற்றாண்டுக்குட்பட்ட நூல்களா யிருக்கக் கூடும்.
8. வடமொழியின் கருநிலைக்காலம்
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கும் டைப்பட்ட காலத்தை வடமொழியின் கருநிலைக்காலம் என்னலாம். இக் காலத்திற்குமுன் புத்த சமயத்தினர் தொடக்கத்தில் பாளி மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், இதுபோது அவர்கள் புராண மொழியைப் பண்படுத்தி அதில் எழுதத் தலைப்பட்டனர். ஆயினும், இவர்கள் பாணினியை முற்றிலும் பின்பற்றாமல் தாய் மொழிகளிலிருந்து முற்றிலும் விலகிவிடாமல் இருந்ததனால் இவர்கள் கால மொழி முற்றிலும் வடமொழியாய் அமைந்து விடவில்லை. இதனை வடமொழி என்று கொள்பவர் இதில் பாளிமொழிக் கலப்பு மிகுதி என்று கூறுவதன் காரணம் இதுவே.
ப்
வடமொழி இலக்கியத்திற்கு முன்மாதிரியாய் அமைந்த இப் புத்தகாலக் கருநிலை இலக்கியத்தின் முதற் கவிஞர் அசுவகோஷன் ஆவான். இவன் கி.பி. 1 அல்லது 2ஆம் நூற்றாண்டிலிருந்த புத்த அரசன் கனிஷ்கனின் அவைப் புலவன். (சிலப்பதிகாரத்திற் குறிக்கப் பட்ட கனகன் இவனே என்பர்). இவன் புத்தசரிதம், சௌந்த ரானந்தம் என்ற இரு காவியங்களும், மூன்று நாடகங்களும் எழுதியதாக அறிகிறோம். நாடகங்களின் சில பகுதிகள் மட்டுமே அண்மையில் கண்டெடுக்கப்பட்ட ஏடுகளில் கிட்டியுள்ளன. புத்தசரிதம் வடமொழியாளரின் காவியப் பண்புடன் முழுவதும் அமையப்பெற்ற பெருங்காவியம் ஆகும். அதே சமயம் காளிதாசன் நடையினும் எளிமை யுடையதாய்க் கிட்டத்தட்டப் புராண நடையிலேயே அது அமைந்துள்ளது. இந் நூல் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தற்காலத்தில் ஸர். எட்வின் ஆர்னால்டு என்ற ஆங்கிலக் கவிஞர் இதனைத் தழுவி ஆசிய ஒளி' என்ற ஆங்கிலப் பெருங் காவியம் எழுதியுள்ளார்.