உலக இலக்கியங்கள்
311
தமிழில் கவிமணி புத்தேரி தேசிக விநாயகம் அவர்கள் இதனை வளர்ச்சிமிக்க கவிதை நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
இக் காலத்திலேயே காஞ்சிபுரம் இந்தியாவின் சமயப் போராட்டக் கனமாகவும் வடமொழிக் கலையின் வளர்ப்பிட மாகவும் ஆகியிருந்த தென்று மணிமேகலை மூலம் அறிகிறோம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் வாழ்ந்த திங்நாகனின் தருக்க நூல்களும், பின்னாட்களில் காஞ்சியிலிருந்து சென்று வடநாட்டுப் பல்கலைக் கழகமாகிய நாலந்தாவில் தலைவரா யிருந்த தர்மபாலரின் புத்த சமய நூல்களும் ஆசியாவெங்கும் புகழ்பெற்றவை. வட நாட்டில் இதேபோல நாகானந்தன் நூல்கள் பெருமையுடையன. ஆனால், இலக்கியத்துறையில் இக் காலத்துக்குரிய சிறந்த நூல் கி.பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டுக் குரிய சூத்திரகன் என்ற அரசன் இயற்றிய மிருச்சகடிகா (மண் தேர்) என்ற நாடகம் ஆகும். இதன் கதைப் புதுமை, நிகழ்ச்சி யொழுக்கு, எளிய நடை, வாழ்க்கைத் தொடர்பு, பாமர மக்கள் வாழ்க்கையில் ஈடுபாடு ஆகிய பண்புகள் வடமொழி நாடகங்களில் மிகவும் அரிதான பண்பாடுகள் ஆகும். எனவே, மேனாட்டாசிரியர்கள் இதனைக் காளிதாசன் சாகுந் தலத்துக்கு அடுத்தபடி எடுத்துப் பாராட்டியதில் வியப்பில்லை. இது உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்கள் இதனை மண்ணியல் சிறுதேர்' என்ற பெயருடன் மொழி பெயர்த்துள்ளார்.
9. வடமொழியின் பொற்காலம் (5-7ஆம் நூற்றாண்டு) காளிதாசன்
வடமொழியின் முதற்கவிஞனான காளிதாசனே அதன் முதன்மை வாய்ந்த கவிஞனும் ஆவான். விக்கிரமாதித்தன் அரசவை யிலிருந்த நவமணிகள் அல்லது ஒன்பது புலவருள் அவன் முதல்வன் என்று மரபுரைக் கதைகள் கூறுகின்றன. ஆனால், இவ்வொன்பதின் மருள் சிலர் வேறு காலத்தவர் என்று அறிகின்றோமாதலால் மரபுரை வரலாறு வாய்மையுடைய தன்று கொள்வதற்கில்லை. மேலும், விக்கிரமாதித்தியன் விக்கிரம சகாப்தம் தொடங்கும் காலமாகிய கி.பி. 1
1ஆம்