உலக இலக்கியங்கள்
315
நினைவூட்டுவது ஆகும். முன்னது எளிய நடையும் இயற்கை யணியும் செறிந்த கலைக்கட்டுக்கோப்பும் உடையது.பின்னதோ பாரிய உருவும் தளர்ச்சியுற்ற விரிந்த கட்டுக்கோப்பும் கடுநடையும் செயற்கை வருணனையும் அணியும் சொல்லடுக்கும் உடையது.
15. ஹர்ஷன்
7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடநாடு முழுவதையும் ஹர்ஷன் ஆட்சி செய்தான். இப் பேரரசன் புத்த சமயத்தினன் ஆயினும், பிற சமயங்களிலும் ஒப்பரவு காட்டினான். இவன் புலவர்களை ஆதரித்த துடன் தானே ஒரு புலவனாயு மிருந்ததாகத் தெரிகிறது. பிரிய தர்சிகை, ரத்னாவளி, நாகானந்தம் என்ற மூன்று நாடகங்கள் அவனால் இயற்றப்பட்டன. இரத்னாவளி உதயணனின் இரண்டாம் பணம் பற்றியது. நாகானந்தம் புத்த சமயச் சார்பான கதை. இந் நாடகங்களை ஹர்ஷன் பெயரால் அவன் அவைப் புலவனான பாணனே இயற்றினன் என்பர் சிலர்.
16. மகேந்திர பல்லவன்
வட நாட்டில் பேரரசனாக ஹர்ஷன் ஆண்ட அதே காலத்தில் தமிழகத்தில் மகேந்திர பல்லவன் என்ற பேரரசன் ஆண்டு வந்தான். ஹர்ஷனையே போரில் எதிர்த்து நின்ற புலிகேசி என்ற இடை நாட்டுப் பேரரசனை வென்றடக்கிய வீரன் இவன்.
வன் சமண சமயத்தவனாயிருந்து திருநாவுக் கரசரால் சைவனாக்கப்பட்டான். சைவனாக்கப்படுமுன் புத்தர், பாசண்டர், காபாலிக சைவர் ஆகியவர் சமய வழக்கங்களைக் கடிந்து அவன் 'மத்த விலாசப் பிரகசணம்' என்ற வசைப்பண்பு வாய்ந்த களிநாடகம் ஒன்று இயற்றினான். இது அண்மையில் தமிழிலும் மொழி பெயர்க்கப் பட்டது.
17. பவபூதி
முதிர்ச்சிக் காலத்தின் மிகச் சிறப்புடைய நாடகக் கவிஞன் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பலபூதியே. வடமொழியாள ரிடையே இவன் பலரால் காளிதாசனுக்கு ஒப்பானவனாகவும் கொள்ளப்படு கின்றான். மகாவீரசரிதம், மாலதி மாதவம், உத்தரராம சரிதம் என்பவை இவன் எழுதிய நாடகங்கள்.