(316) ||.
அப்பாத்துரையம் - 44
இவற்றுள் மாலதி மாதவம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டையும் பாரசீக லைலா மஜ்னூனையும் நினைவூட் வல்ல காதற்கதை. வடமொழியில் கற்பனைப் புதுமையுடைய ஒன்றிரண்டு நூல்களில் இது இடம் பெறுவது. பவபூதியின் மற்ற இரு நாடகங்களும் இராமாயணக் கதை பற்றி நாடகங்கள். முதலது அரசுரிமை விழா வரையுள்ள முழுக்கதையும், பின்னது சீதை பிரிவும் காடுறை வாழ்வும் கூறுவது. உத்தரராம சரிதமே இவரின் அருஞ் சிறப்புக்கள் யாவும் நிறைந்த உயர் நூல்.
வடமொழி நாடக இலக்கிய மாளிகையின் தலைக்கோபுரம் காளிதாசனானால், அதன் கடைக்கோபுரம் பவபூதி என்னலாம். காளிதாசனின் சிறப்பு மொழி எல்லை கடந்து உலகப் புகழ்பெற்றது. பவபூதியினதோ வடமொழி யெல்லையில் புகழ் நிறுவிற்று. நடைநயமும் மொழியினிமையும் இயற்கைவனப்பும் காளிதாசன் பண்புகள் பெருமித நடையும் சொல்முழக்கமும் வீறுமிக்க பண் போவியங்களும் கலைக்கட்டுக் கோப்பும் பவபூதியின் சிறப்புக்கள் ஆகும்.
பலபூதிக்குப் பிற்பட்ட நாடக ஆசிரியர்களிடையே காளி தாசனின் இயற்கைநாயமும் குறைவு; பவபூதியின் கட்டுக்கோப்பும் வீறும் மறைந்தன. சொல்லடுக்குகளும் செய்றகையணிகளும் சமயச்சார்பான விளம்பரங்களுமே அவற்றுக்கு உயிரியக்கம் தந்தன.
18. முத்ரா ராக்ஷஸம்
8ஆம் நூற்றாண்டில் விசாகத்தன் எழுதிய முத்ரா ராக்ஷஸம் வடமொழியில் வரலாறு தழுவிய நாடகமாகச் சிறப்படைந் துள்ளது. - சந்திர குப்தனின் அமைச்சனாகக் குறிக்கப்படும் சாணக்கியன் எதிர்ச்சூழ்ச்சிகளால் சிதறடித்து அவனைச் சந்திரகுப்தன் அமைச் சனாக்கும் திறத்தை விரித்துரைப்பது இந் நாடகம். நாட்டுப்பற்றும் அரசப்பற்றும் மாறா நட்புறுதியும் உடைய ராக்ஷஸனின் பண் போவியம் இந் நாடகத்தின் பெருஞ்சிறப்பு ஆகும். சாணக்கியனைப் பற்றிய செய்திகள் முதன் முதல் இந் நாடகத்திலேயே காணப்படு கின்றன.