உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(318) ||.

அப்பாத்துரையம் - 44

20. உலகப் புனைகதை இலக்கியமும் இந்தியாவும்: பஞ்சதந்திரம்

உலக இலக்கியத்தில் வரலாற்று முறையில் இந்தியாவுக்குத் தனிச்சிறப்புத் தரும் துறை புனைகதை இலக்கியம் ஆகும். இத் துறையில் இன்று நமக்குக் கிட்டியுள்ளவை வடமொழி நூல்கள். அவையும் பெரும்பாலும் கதம்ப இலக்கியம்போலப் பலபடி திரிபுற்றுவந்த பிற்கால நூல்களே. ஆயினும், இவற்றின் மூல நூல்கள் வடமொழி காலத்துக்கு முற்பட்ட புத்தகாலத்தவை என்றும், பாளி, அர்த்தமாகதி, பைசாசமொழி ஆகிய பண்டைத் தாய்மொழி இலக்கியங்களாக அவை இயங்கின வென்றும் அறிகிறோம். இவற்றுள் புத்தரின் சாதகக்கதைகள் விலங்கு, பறவைகள் ஆகிய வற்றுக்கு மனிதப்பண்பும் பேச்சும் செயலும் தந்துள்ளன. இவற்றி லிருந்து 'பஞ்சதந்திரக் கதைகள்' உருவாயின. இன்று வட மொழியிலுள்ள உரையும் செய்யுளும் கலந்த பஞ்சதந்திரம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில்தான் இன்றைய உருவடைந்ததாயினும், கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே ஏதோ உருவில் வழங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில், இதுவே கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் பாரசீகத்திலிருந்து அரபு, சிரியக், கிரேக்கம், இலத்தீனம் ஆகியவற்றிலும், தற்கால மேனாட்டு மொழிகளிலும் பலபடி திரிந்து பரந்தது. பிற்காலத்தில் இது நீதி உரைகளுடனும் வேறுசில கதைகளுடனும் 'கீதோபதேசம்' என்ற நூலாக இயற்றப்பட்டது.

வடமொழிக்கு முற்பட்ட காலத்துக்குரிய மற்றொரு கதைத் தொகுதி குணாட்டியன் என்ற புலவனால் பிசாச மொழியில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்ட 'பிருகத்கதா’ ஆகும்.

தன் சுருக்கமாக வடமொழியில் 11ஆம் நூற்றாண்டில் புப்தமித்திரர், சேமேந்திரர் என்ற புலவர்கள் நூல்கள் எழுதினர். சோமதேவர் என்பவர் இதன் கதைகளை வகுத்துக் கூட்டிக் குறைத்துக் கதை யோடைக் கடல் (கதாசரித் சாகரம்) என்ற பெருநூலை இயற்றினார். தமிழில் குணாட்டியர் நூலின் மொழி பெயர்ப்பான பெருங் கதையின் பகுதிகள் கிடைத்துள்ளன. சங்ககாலத் துக்கும் முற்பட்ட இடைச்சங்கக்காலப் பண்பாடு நிறைந்த இத் தமிழ் நூலின் காலம் தெளியப்படவில்லை.