உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

(321

இந் நூல்களில் சங்கரர் வடமொழியில் கடுமையான உரப்பொலி களை நீக்கியும், வட மொழியில் இதுவரை வழங்கப்படாத எதுகை மோனைகளைக் கையாண்டும் தமிழோசை அமையப் பாடியுள்ளார். கண்ணப்பர், சாக்கியர், சம்பந்தர் முதலிய தமிழ்ப் பத்தியியக்கத் தலைவர் களையும் இவர் புகழ்ந்து பாராட்டி யுள்ளார்.

25. வேதாந்த தேசிகர்: ஹம்ஸசந்தேசம்

தமிழகத்தில் சங்கரரின் பணியைப் பிற கோட்பாடுகளுடன் ணைத்தவர்கள் நீலகண்டர், ஹரதத்தர், இராமனுசர் ஆகியவர்கள். கன்னட நாட்டில் மாத்துவரும் வங்கநாட்டில் சைதன்னியரும் இதே பணியாற்றினர். தமிழகத்தில் இராமானுசரின் சீடரும் வட கலையைத் தோற்றுவித்தவரும் ஆன வேதாந்த தேசிகர் வட மொழியிலும் தமிழிலும் சிறந்த கவிஞர். இவரால் ஹம்ஸசந்தேசம் என்ற தூதுத் துறைக் காவியமும் 'யாதவாப்பு யுதயம்' என்ற காவியமும் பிரபோத சந்திரோதயத்தைப் பின்பற்றிச் ‘சங்கற்ப சூரியோதயம் என்ற நாடகமும் எழுதப்பட்டன. இவற்றுள் ஹம்ஸசந்தேசம் காளிதாசன் மேகசந்தேசத்துக்கு அடுத்தபடி யாயுள்ள தூதுத்துறை நூல்.

26. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (சம்பூ)- போஜன்

வடமொழியில் மிகவும் பிற்பட்டுத் தோன்றிய மற்றொரு புதுத்துறை சம்பூ அல்லது உரையிடையிட்ட பாட்டுடைக் காவியம் ஆகும். தமிழகத்தில் சிலப்பதிகார மரபுரையன்றி இதுபற்றி எதுவும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால், மலையாள நாட்டில் இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமொழி நாடகங்களில் வழங்கப் பட்டன. மலையாளத்தில் காவியங் களிலும் 12-13ஆம் நூற்றாண்டில் இது பெருவழக்காயிருந்தது. வடமொழியில் இது 9 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 12ஆம் நூற்றாண்டுகளில் சிறப்புற்றது. தொடக்கத்தில் அதாவது 9-10 ஆம் நூற்றாண்டுகளில் இத் துறையைக் கையாடியவர்கள் பெரிதும் சமணரேயாவர்.அரிச்சந்திரனின் ஜீவந்தர சம்பூ, விக்ரமபட்டரின் நளசம்பூ அல்லது தயமந்தி கதா, சோமதேவ சூரியின்