உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போதும் முதலாளித்துவம்

1323

பின்பற்றி விக்கிரமாதித்தன் கதையெனத் தாய்மொழிகளில் வழங்கப்படும் 25 வேதாளக் கதைகள் (வேதாள பஞ்சவிம்சதீ), 32 பதுமைக்கதைகள் (சிம்ஹாசன த்வாத்ரிம்சிகா) ஆகியவை பெருவழக்காயின. இக் கதையிலக்கியங் களின் புகழலை களிலிருந்தே அராபிக் கதைகள், மேனாடுகளில் வழங்கிய பொக்காச்சியோ, சாஸர், பாந்தேன் கதைகள் எழுந்தன என்று அறிஞர் கூறுகின்றனர்.

29. செயதேவர்: கீத கோவிந்தம்

13ஆம் நூற்றாண்டில் வங்க நாட்டில் வடமொழியில் வைணவ இயக்க அலையில் ஈடுபட்டுச் சயதேவர் என்பவர் சங்கரர் புகழ்ப்பாக்களைப் பின்பற்றிக் ‘கீத கோவிந்தம்' என்ற பத்திப்பாடல் நூலும் பிரசன்னராகவம் என்ற நாடகமும் இயற்றினார். இவர் பாடல்கள் பசனைகளுக்கும் கச்சேரிகளுக்கும் ஏற்ற பண்ணியலும் உணர்ச்சி யார்வமும் எழுச்சியும் உ

30. விசயநகர காலம்

யன.

14 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசை நிறுவ உதிவிய வித்யாரண்யரே வேதங்களுக்கு முதன்முதலாக உரை எழுதினர் என்பர். சிலர் அவ்வுரைகாரர் அவர் உடன்பிறந்தார் என்பர், வித்யாரண்யர் ஆதிசங்கரரின் கதையான சங்கரவிசயம் இயற்றினார்.

விசயநகர அரசன் புக்கனின் புதல்வனாகிய கம்பனன் மதுரையை சென்று ஆண்ட கதையை அவன் மனைவி கங்காதேவி மதுரா விசயம் என்ற காவியமாகவும், கிருட்டிண தேவராயர் நாச்சியார் என்ற பெண்ணாழ்வார் கதையையும் அச்சுதராயர் மனைவியாகிய திருமலாம்பா தன் கணவன் வாழ்வையும் திருமணத்தையும் பற்றிய வரதாம்பிகா பரிணயம் என்ற சம்பூநூலையும், தஞ்சையரசன் ரகுநாதன் மனைவி ராமபத்ராம்பா (17 ஆம் நூற்றாண்டு) அவர் வரலாறாகிய ரகுநாதாப்யுதயம் என்ற காவியத்தையும் எழுதினர். 15 ஆம் நூற்றாண்டில் இராமானுசதாசரால் இராமானுச சம்பூ எழுதப்பட்டது.