இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நல்லறிவு செயலாக
நல்லறிவு செயலாக மலரும் போது
நாட்டிலுள்ள தீமையெலாம்
ஒன்று சேர்ந்து,
வெல்லுதற்கு நினைத்தாலும்
வெற்றி இல்லை!
வேளாண்மை எப்பொழுதும்
பொய்ப்பதில்லை!
வல்லதொரு கொள்கையினை
வகுத்துக் கொண்டால்
வரும்சூழ்ச்சி பலவெனினும்
வெற்றியுண்டாம்!
வெல்லுவதும் தோற்பதுவும்
வீரர்க் கொன்றே !
வெற்றிக்குப் பலகோணம்
உண்டாம் காண்டீர்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் -கனிச்சாறு-2
உதவு
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெ தியாகராயர் நகர்.
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654