உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 44

வெறுக்கத்தக்க இப்பகற் கொள்ளையைக் கண்டு கசப்படைந்துதான் கார்லைல், லங்காஷையர் உற்பத்தியாளர் வகுப்பின் தனிக்குணச் சித்திரமாகத் தாம் வரைந்த 'பிளக்ஸன்' வாயிலாகத் தம் சொற்களை அமைத்து 'பிளக்ஸன்' தன் தொழிலாளிகளிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறார்.

"பெருந்தன்மை வாய்ந்த என் நூற்புத் தொழிலாளர்களே! நாம் ஒருலட்சம் பவுன் சம்பாதித்துவிட்டோம்.அவைகளனைத்தும் என் செல்வம். நாள்தோறும் நீங்கள் பெறும் மூன்று வெள்ளி ஆறு காசு (3 Shillings 6 Pence) உங்களதே. அதை எடுத்துச் செல்லுங்கள். இதோ உங்கள் குடிச் செலவுக்கு நாலு காசு. நான் கூலியுடன் தரும் இதைக் கொண்டு என் பெயரை வாழ்த்திக் குடித்து மகிழுங்கள்!”

முதலாளித்துவ சமூகம் முன் செல்லுந்தோறும் உற்பத்தி முறைகளில் பெருத்த முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. தொழிலாளர் மேன்மேலும் மிகுதியான மதிப்புடைய ய செல்வத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால், வரவர அவர்கள் தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மதிப்பில் குறைந்த பங்கே பெறுகின்றனர். இவ்வகையில் சுரண்டல் வளர்ச்சி யடைந்து கொண்டே போகிறது.

முதலாளித்துவம் உழைப்பாளிகளின்

வாழ்க்கைத்

தரத்தைக் குறைத்துள்ளதென்று பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கருத்துச் சரியல்ல என்பது மேற்கூறியவற்றால் விளங்கும். உண்மையில் உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதினாலேயேதான் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அப்படியானால் தொழிலாளிகளைச் சுரண்டுதல் வளர்ந்திருப்பது எத்துறையில்?

66

இது, சுரண்டல் எது என்ற கருத்தைப் பொறுத்தது. உற்பத்தியாற்றல் பெருகுந்தோறும் ஒவ்வொரு படியிலும் நடைமுறையில் ஏற்படும் வாழ்க்கைத் தர உயர்வுக்கும், ஏற்படக் கூடும் தர உயர்வுக்கும் உள்ள வேறுபாடே அச்சுரண்டலின் அளவு ஆகும். அதாவது சுரண்டல் என்பது தொழிலாளி பெறும் ஊதிய அளவைப் பொறுத்ததன்று அவன் பெறவேண்டிய, ஆனால் பெறாதிருக்கும் ஊதியத்தின் அளவையே பொறுத்தது.”