போதும் முதலாளித்துவம்
21
சரக்குகள் க்காரணத்தால் விற்பனையாகாமல் கிடக்கின்றன. சில உற்பத்தியாளர்கள் இதனால் தம் கடன்களைத் தீர்க்க முடியாமல் போகிறார்கள். இவர்கள் கடன் கொடுபடாது போகவே இவர்களுக்குக் கடன் கொடுத்தோர், தம் கடனுதவியாளர்களுக்கும் கடன் மீட்டுக் கொடுக்க முடியாமல் போகிறது. இங்ஙனமே ஒரு நச்சுச் சுழல் தொடர்கிறது. சேமநிலயங்கள் ஒவ்வொன்றாக இன்னலுட் படுகின்றன. மோசமான பொருளாதார நெருக்கடி விளைகிறது.
66
இதுபற்றி பொருட்குவை ஆராய்ச்சி (Finance) அறிஞர் கூறுவதாவது:- "பல வகையாகப் பின்னிக் கிடக்கிற பரந்த கடன்முறைவலையில் எத்தனையோ சிற்றிழைகள் ஒன்றுக் கொன்று ஆதரவாக நிலை பெறுகின்றன. இப்பின்னல் வலையில் எங்கோ ஓரிடத்தில் ஓரிழை அறுகின்றது. உடனே சில பெரிய பொருட்குவை நிலையங்கள் வீழ்ச்சியடைகின்றன. கடன் முறைக்கோட்டை தவிடு பொடியாகின்றது. விலைகள் தலைகுப்புற விழுகின்றன. பொருளாதார உற்பத்திகள் செயலற்று நின்றுவிடுகின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் அழிவெய்து கின்றனர். எங்கும் முன்னைய மகிழ்ச்சியில் மண் விழுந்து இருள் சூழ்கிறது. சில காலம் சென்றபின் சிறிது சிறிதாக நம்பிக்கை உயிர்க்கின்றது. மக்கள் நோக்கம் தெளிவடைந்து தொழிலுக்குச் சாதகமான நிலை ஏற்பட்டு என்றுமுள்ள நன்னிலை மீண்டும் எழுகின்றது. மருந்து உட்கொண்டு பிழைத்தெழுந்து உடல் நலம் பெறுபவன்போல் உலகம் நலமடைகின்றது. ஆயினும் இம் மருந்துக்கு ஏற்படும் செலவளவு வீணானதும் கணக்கிலடங் காததுமாகும்!”10
முதலாளித்துவத் தொழில்வளர்ச்சி கால வரலாறு முழுவதும் உண்மையில் தொழில் நிலைமையில் இத்தகைய ஒழுங்கான ஏற்றத் தாழ்வுகளே நிறைந்துள்ளது. உலக வர்த்தகக் களங்களில் செல்வ வளமிக்க பருவமொன்றிருந்தால் அதனையடுத்து வழக்கமாக ஒரு நெருக்கடி நி ஏற்படாதிருப்பதில்லை.
லைமை
முதன் முதல் பெருத்த நெருக்கடி ஏற்பட்டது 1825-ல். அதன் பின் 1836, 1847, 1857, 1866, 1873, 1877, 1890, 1900, 1907, 1921 ஆகிய ஆண்டுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டன. இறுதியாக 1929-ல் வந்த