உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(24) ||.

அப்பாத்துரையம் - 44

அது எடுத்துக் கொண்டுள்ள பணிகளும் அதன் பலன்களும் வியப்புக்கிடமானவை. 'பொது உடைமை விளம்பர அறிவிப்பு' இதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுகிறது. அது கூறுவதாவது:-“இன்ப வகுப்பினர் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட அவர்களின் ஆட்சிக் காலத்தில், தமக்கு முன்னிருந்த அத்தனை முறைகளும் சேர்ந்து உருவாக்கிய உற்பத்திச் சாதனங்களைவிட மிகவும் பிரம்மாண்டமான அளவில் மிகுதியான உற்பத்திச் சாதனங்களை உண்டுபண்ணியுள்ளனர். இயற்கையின் சக்திகளை மனித சக்திக்கு உள்ளடக்கல், இயந்திர சாதனங்கள், தொழில், உழவுத் தொழில் ஆகியவற்றில் இயைபியல் (Chemistry) அறிவை ஈடுபடுத்தல், நீராவிக் கப்பல், போக்குவரத்து புகைவண்டிப் பாதை, மின்சாரத் தந்தி, முழுமுழுக்கண்டங்களையெல்லாம் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவித்தல், ஆறுகளை வேண்டிய வழியில் செலுத்தல், மாயத்தால் உற்பத்தி செய்யப்பட்டனவென்னும்படி பெருவாரி யான மக்கள் தொகுதியை வளர்த்தல் ஆகிய இத்தனை உற்பத்தி ஆற்றல்கள் சமூக உழைப்பின் கருவில் இருந்தன என்று முந்திய தலைமுறையில் எவரும் கனவு கண்டிருக்கக்கூட முடியா தன்றோ?”

அளப்பரிய இப்பெரு நன்மைகளை ஒத்துக் கொண்டும், அவற்றை முற்றிலும் மறைக்கத்தக்க அளவில் அதன் தீமைகள் எல்லையற்றவையும் கொடியவையும் ஆகும் என்று சமதர்ம வாதிகள் கருதுகின்றனர்.

முதலாளித்துவ நாகரிகத்தின் கண்டனங்கள் இரு பெருந் தொகுதிகளுள் அடங்கும். முதல்தொகுதி சமதர்ம வாதிகளின் எதிர்ப்பில் முக்கியமான எதிர்ப்பிலக்காகும். அது முதலாளிகள், தொழிலாளி எதிர்ப்பிலக்காகும். அது முதலாளிகள், தொழிலாளி வகுப்பைச் சுரண்டி வாழ்கின்றனர் என்பதே. இரண்டாவது கண்டனம் முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தி முறை, போதிய திறம்பட்ட முறையும் நேர்மையான ஒழுங்காட்சியும் உடையதன்று என்பது. சமதர்ம இயக்கம் இவ்விரண்டு தீமைகளையும் நீக்க முயல்கின்றது. "உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதற்கென அமைந்த, உற்பத்திக்கு உழைக்காத ஒரு வகுப்பிடம் ஆதிக்கம் இருப்பதைத் தவிர்க்க உறுதி