உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

போதும் முதலாளித்துவம்

25

கொண்டிருப்பதே சமதர்ம இயக்கத்தின் முக்கிய நோக்க மாகும். அவ்வியக்கத்திற்கு உயிர்ப்பும் ஊக்கமும் தருவது இப்பண்பே.. .இரண்டாந்தரமான நோக்கம் ஒன்றும் அதற்குண்டு. வீணே பொருள்கள் அழிவதைத் தடுத்துச் சமூகத்திற்கு அதன் முயற்சிக்கேற்ற பயன் ஏற்படும்படி தொழில் முறையின் அமைப்புத் திறத்தை முன்னேற்றுவித்து நடைமுறையாட்சியையும் மேம்படுத்துவதே

அதன்

அவ்விரண்டாவது நோக்கம்.

"14

உண்டுபண்ணித் தந்தபின்

மூலப் பொருளின் உற்பத்தித் திறத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். முதலாளித்துவம் இம்முறையில் முற்றிலும் படுதோல்வியடைந்துள்ளது.மறுக்க முடியாதபடிமுக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ பொருள்கள் முதலாளித்துவத்தால் ஏற்பாடு செய்யக் கூடாதவையாயிருக்கின்றன. ஏனெனில் "அப்பொருளை அதற்காக மக்களிடமிருந்து பணமாக விலை பெறுவதற்கில்லை. எடுத்துக் காட்டாகக் கலங்கரை விளக்கங்களைக் கூறலாம் (Light houses) இவையில்லாமல் பெரும் கடற்பிரயாணம் செய்தலரிது.வர்த்தகக் கப்பல்கள் அவையில்லாவிட்டால் அஞ்சி அஞ்சித் தங்கி மெள்ளவேதான் பிரயாணம் செய்ய நேரிடும். அப்படியும் அவற்றுட் பல அழிவெய்தும். இவ்வழிவால் கப்பலில் செல்லும் சரக்குகளின் விலையும், அவற்றின் இயற்கை மதிப்பு விலையை விட எவ்வளவோ மிகுதியாய் விடும். ஆகவே கலங்கரை விளக்கங்கள் கடற் பிரயாணஞ் செய்பவர்கட்கு மட்டுமல்லாமல் பயணம் செய்யாதவர், செய்ய எண்ணாதவர் ஆகியவர்களனை வர்க்குமே பெரிதும் பயன் தருபவை. கலங்கரை விளக்கங்கள் இவ்வளவு இன்றியமையாப் பயனுடையவையாயிருந்தபோதிலும் முதலாளிகள் அவற்றை என்றும் செய்ய முயலமாட்ட கலங்கரை விளக்கக் காவலர், வருகிற போகிற கப்பல்களொவ் வொன்றினிடமிருந்தும் வரி பிரிக்கக் கூடுமேயானால், பிரிஸ்டல் கடல் முகத்தில் காணப்படும் விளக்கு வரிசைகளைப்போல் கடல்களில் கரைகள் நெடுகக் கலங்கரை விளக்கங்கள் ஏற்படுவது உறுதி. ஆனால், இங்ஙனம் வரி விதிப்பதென்பது முடியாத காரியம். கப்பல் மாலுமிகளின் பொருளை எதிர்பார்க்காமலேயே ஒரு சார்பற்ற நிலையில் எல்லாக் கப்பல்கள் மீதும்

அவ்விளக்கங்கள் ஒளி வீசியாக வேண்டும்.

முயலமாட்டார்கள்.