26
அப்பாத்துரையம் - 44
இந்நிலையில் முதலாளிகள் செய்யக்கூடுவதெல்லாம் கடற்கரைகளை ஒளியில்லாதிருக்கும்படி விட்டுவிடுவதே. ஆகவேதான் அரசியல் இவ்விடத்தில் தலையிட்டுச் செயலாற்ற நேரிடுகிறது. இங்ஙனம் கடல் ஆற்றலை நம்பியிருக்கும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு உயிர் நிலையாயிருக்கிற இத்துறையில் முதலாளித்துவம் முற்றிலும் செயலாற்றாது போகின்றது, அரசியலே அதனைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தியும் அதற்காகக் கப்பல் உடைமையாளர்கள் மீது வரி விதித்தும் வரவேண்டியிருக்கிறது.
9915
9916
இக்குற்றச்சாட்டுக்கு விடையாக முதலாளித்துவத் தரப்பினர் கூறுவதாவது, இத்தகைய பயனுடைய வேலைகளைத் தனிமனிதர் மேற்கொள்ளாவிட்டாலும் அரசியல் ஏற்றுக் கொள்ளுகிறது. ஆடம் ஸ்மித்கூட விலக்க முடியாத குறைந்த அளவு அரசியல் கடமைகளுள் இதனை உள்ளடக்கிக் கூறியிருக்கிறார். அவர் குறிப்பதாவது, “எந்தத் தனி மனிதனுக்கோ. தனி மனிதர் சிறு குழுவுக்கோ பொருள் வகை ஊதியம் தராத சில பொது ஊழியங்கள் சில பொது நிலையங்கள் ஆகியவற்றை அரசியலாரே நிறுவி நடத்த வேண்டும். ஏனெனில், பெரிய அளவில் சமூகத்திற்கு அதன் செலவு பன்மடங்கு மிகுதியாகப் பயன் தருமாயினும், எந்தத் தனி மனிதருக்கோ தனிமனிதர் குழுவுக்கோ அச்செலவுக்கேற்ற கைம்மாறு கிடைக்கமுடியாது.' இவ்விடை அறிவுக்குப் பொருந்துவதாயில்லை. இக்கடமை அரசியலுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனால், மாற்றிக் கொடுக்கப்பட்டதனால் அது நிறைவேற்றப் பட்டதென்று ஆய்விடாது.இவ்வகையில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாவது; அரசியல் இத்துறையில் தன் கடமையைச் சரிவர ஆற்றியுள்ளதா என்பதே. இதற்கு விடை: ஆற்றியுள்ளதென்று பெரும்பாலும் கூறுவதற்கில்லை. உடல் நலத்துக்குக் கேடு பயக்கும் சேரிகள் மிகுதியாய் இருப்பது, தனிமனிதர் நன்கொடை உதவிகளிருந்தும்கூட கல்வியில்லாமை மிகுதியாயிருப்பது முதலிய கோளாறுகள், முதலாளித்து அரசியல் இப்பெரு முயற்சிகளைத் திறம்படச் செய்ய முடியவில்லையென்பதைக் காட்டுகின்றன.