உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போதும் முதலாளித்துவம்

29

வேற்றுமைச் சீர் கேடுகளும் எதிர் விளைவுகளும் நிறைந்த இடைக்காலத்தை அவர்கள் கவனியாது விட்டு விடுகின்றனர்.

ஒரு சமதர்ம எழுத்தாளர் இவ்வகையில் கூறுவதாவது: "உற்பத்தி, விலை இவற்றின் ஏற்றத்தாழ்வு விகிதங்கள் தம்மைத்தாமே சரிப்படுத்திக் கொள்ளும் என்ற இயற்கை நியதி நிறைவேற முதலாளிகள் நடைமுறையில் அனுமதிப்பதில்லை. விலைகளின் வீழ்ச்சி எவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய அளவிற்கு இருப்பதில்லை. ஆகவே விலைகள் பின்னும் ஆதாயந் தருவதாகவே இருக்கின்றன. நுணுக்கத் துறை வளர்ச்சித் திறங்களின் மிகுந்த ஆற்றல், விலை ஏற்றத் தாழ்வின் மூலம் ஏற்பட வேண்டிய விளைவைத் தடுத்துவிடுகின்றது. ஆகவே அரசாங்கங்கள் இச்சமயம் தலையிட்டுத்தான் பட்டினியைத் தவிர்க்க முயற்சிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வரசாங்கங்கள்கூட இயற்கை அமைதியைக் கட்டுப்படுத்தச் செயற்கையாகப் பொருட் பெருக்கத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது.”

இவ்வளவோடு கதை முடிந்து விடவில்லை. திட்டமில்லா உற்பத்தியின் இயற்கைப் பலன் உற்பத்தியாளரிடையே 'ஒருவர் குரல் வளையை வளையை ஒருவர் அறுக்கப் பார்ப்பார்களென்ற பழஞ்சொல்லை நினைவூட்டும், மோசமான போட்டியாகும். விளம்பர முறை இதுவகையில் ஒரு எடுத்துக்காட்டு. விளம்பரங்களில் ஒரு சிலவே தகவலறிவிப்பவையாயிருக்கின்றன. பெரும்பாலானவை போட்டி மனப்பான்மையுடன் முன்னுள்ள தேவைப் பொருள்களையே மீட்டும் வேறுருவில் தருவிக்கின்றன. கார்லைல் எடுத்துக்காட்டிக்கூறும் கதை ஒன்றில் லண்டன் ஸ்ட்ராண்டு பகுதியிலுள்ள ஒரு தொப்பி வர்த்தகன் மற்றப் போட்டியாளர்களைவிட நல்ல தொப்பிகளைச் செய்வதை விடுத்து அதற்கு மாறாக 7-அடி உயரமுள்ள பிரமாண்டமான தொப்பி ஒன்றைச் செய்வித்து அதனைத் தெருவழியே தள்ளிக் கொண்டுபோக ஒருவனை அமர்த்துகிறான். இத்தருணத்தில் அவர் கூறுவதாவது ‘முன்னையிலும் சிறந்த தொப்பி செய்க' என்ற இயற்கையன்னையின் பணியை அவன் கைவிட்டு விட்டான். இயற்கை அமைதியுடன் நடந்திருந்தால் அவன் இதனையே செய்திருப்பான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இப்போது