உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 44

அவன் தன் அறிவுத்திறத்தையெல்லாம் ஈடுபடுத்துவது, தான் அவ்வண்ணம் செய்வதாகக் காட்டிக் கொள்வதிலேயே. அவனுக்கும் இப்போது போலி வர்த்தகமே உலகத்தை ஆட்டிவைக்கும் கடவுளாய் விட்டார் என்பது தெரிந்து விட்டது போலும்!' இவ்வழியில் 7-அடித் தொப்பி இயற்றும் முயற்சி, உற்பத்தியாளனின் அறிவுத்திறம், விளம்பரக்காரன் உழைப்பு ஆகிய யாவும் முற்றிலும், விழலுக்கிறைத்த நீர் ஆகிறது. வீணழிவு மட்டுமன்றி விளம்பரத்தினால் வரும் இன்னொரு கேடு அதன் மூலம் பத்திரிகை உலகின் மீது ஏற்படும் நேர்மையற்ற ஆதிக்கம் ஆகும். பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் விளம்பரங்களில்லாமல் வாழ முடிவதில்லை. விளம்பரங்களைத் தரமாட்டோம் என்று அச்சுறுத்துவதன் மூலம் பல பத்திரிகைகளின் கோட்பாடுகளும் நோக்களுமே மாற்றமடைந்துள்ளன.

வீண் விளம்பரங்களோடு கூட அனாவசியமான வீண் வேலை இரட்டிப்புகள் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ளன. பக்கத்துக்குப் பக்கமாக இடப்படும் புகை வண்டிப்பாதைகள், சரக்குகளிருப்பில் இரண்டு தொகுப்பு வைத்திருத்தல். அதிகத்தளப்பரப்பு வைத்திருத்தல், சரக்குகள் கெட்டுப்போதல் முதலிய வகைகளில் எவ்வளவோ வீண் பொருளழிவு ஏற்படுகிறது.

வையனைத்தும் தங்குதடையற்ற தனி

போட்டியுரிமையின்

மனிதர்

ன்றியமையாப் பயன்கள். அவற்றால் ஏற்படும் சமூக நஷ்டம் மிகப் பெரிது.

சரக்குகளின் அளவை விடுத்து அவற்றின் தரத்தின் மீது கவனம் செலுத்தினால் தற்கால உற்பத்தி முறையில் தீமைகள் இன்னும் மிகுதியாகவே காணப்படும். ஒரே மனிதன் பல்வேறு துறைகளில் வெற்றி பெருவதானால், ஏமாற்றும் சரக்கு மாறாட்டமும் செய்யாமல் அங்ஙனம் செய்ய முடியாது. ஓர் உற்பத்தியாளன் இத்தகைய நேர்மையற்ற முறைகளைக் கையாளத் தாடங்கிவிட்டால், மற்றவர்களும் அவற்றையே கையாள வேண்டும். அல்லது தொழில் துறையை விட்டுச் செல்ல வேண்டும். மணல் கலந்த சர்க்கரை, அட்டைகள் உள்ளே வைக்கப்பட்ட மிதியடிகள் ஆகியவற்றைப் பற்றிய அனுபவம் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. ஓர் ஆசிரியர் குறிப்பிடுவ