உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போதும் முதலாளித்துவம்

31

தாவது: “உணவுத் துறையில் அளவைப் பெருக்கிக் காட்டும் தந்திரமும், சரக்கு கலப்பட முறையும் பெருத்த ஆதாய மடைவதற்கான எளிய வழிகள் ஆகும். ஏனெனில், அவற்றைக் கடைசியாக வாங்கிப் பயன்படுத்துபவனுக்கு எதிர்க்கும் ஆற்றலும் இல்லை. சரக்கின் தரமறியும் அறிவும் கிடையாது. உலகின் உணவுத் தொகுதியில் தனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்கப் பெரும்பாலாகப் பெண்மணிகளே வருவர். இங்ஙனம் வரும் பெண்களுக்குத் தங்கள் வறுமை மிக்க குடும்பத்தில் வழக்கமாகக் கிடைக்கும் அனுபவமன்றி உணவின் உயர்வு தாழ்வு பற்றி வேறு எதுவும் தெரியாது." சரக்குகளின் தரம் ஓரளவு நன்றாயிருக்கு மிடத்தில் கூட அவற்றின் கலைப் பண்பும் வனப்பும் சொல்லுந்தரமாயிருப்பதில்லை.

மேற்குறிப்பிட்ட தீமையை மட்டிலும் முதலாளித்துவ அறிஞர்கள் ஒப்புக்கொள்ளாமலில்லை. ஆனால் ‘இது ஒரு சில துணிகரக்கொள்ளைக்கார மனப்பான்மையுடைய தீயவர்கள் வேலைமட்டுமே, அதோடு எங்கள் முறையிலேயே இதனைத் திருத்துவதற்கான கூறுகள் இருக்கின்றன,” என்று அவர்கள் கருதுகின்றனர். அது யாதெனில் 'உற்பத்தியாளர்கள் விலை மட்டிலுமல்ல போட்டியாடுவது, தரத்திலும்தான். ஆகவே உற்பத்தியாளர்கள் மனதில் மேன்மேலும் நல்ல தரமான சரக்குகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வர வளர இடமுண்டாகிறது.கடைசியாக அரசியலார் மேற்பார்வை, சரக்காய்வு, விளம்பரம் ஆகியவை இருக்கின்றன,' என்பதே அவர்கள் விளக்கம்.

இத்தகைய திருத்தங்கள் நல்ல பயன் தரக்கூடும் என்ற நிலையிருப்பது உண்மையே - ஆனால், அப்பயன்கள் இருந்து வருகின்றனவா? தரத்தைக் குறைத்து அமோக ஆதாயம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை தன் நலத்துக்காகவாவது தரத்தைப் பாதுகாக்கும் உணர்ச்சியைவிட சிலரிடம் மேம்பட்டுவிட ஏதுவாகிறது. அரசியல் மேற்பார்வையும் வலுவற்றதாக்கி விடப்படுகிறது. ஏமாற்று வித்தைகளில் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு ஒழிக்கப்படுமுன் பல வித்தைகள் முளைத்து விடுகின்றன. அதோடு சூழ்ச்சியறிவில் தேர்ந்த வழக்கறிஞர் படைகளின் உதவியால் உற்பத்தியாளர் சட்டத்தை மீறவும்