32
அப்பாத்துரையம் - 44
சட்டத்தின் உதவியைக்கொண்டே அதன் வலைகளிடையே தப்பிச் செல்லும் வழி கண்டு கொள்ளுகின்றனர்.
முடிவாக - இத்தீமைகள் வேறோடு நீக்கப்பட்டால், அரசியல் மேற்பார்வைக்காகச் செலவிடப்படும் நாட்டுச் சாதன ஆதாரங்களத்தனையும், நாட்டு வாழ்வுக்கு வேறு வகையில் பயன்பட மீந்து நிற்பவையாகும். இவ்வாதார முழுவதும் பொருளுற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டால் மக்களுக்கு இன்னும் நல்ல உணவும் இன்னும் நல்ல உடையும் கிடைக்க வழி ஏற்படும்.
மேற்கூறப்பட்ட வர்த்தகச் சூதாட்டத்தை மின்மினியாக்கும் தன்மையுடையது. பொருள் துறைச் சூதாட்டம், 'வெப்லன்’ எழுதுவதாவது: “பழைய பண அடிப்படைப் பொருளியல் (Money Economy) முறையிலும்; அதனோடிணைந்த பங்காளித்துவ முறைகள், தொழில் முயற்சிகளின் தனிஉடைமை முறை ஆகியவற்றிலும்; தொழில் உற்பத்தி நடைமுறைகளின் நிர்வாக நிர்ணய ஆதிக்கம் ஒருசில மனிதர் கையிலிருந்தது. அவர்கள் நலனும் நோக்கமும் பொதுமக்களின் பரந்த சமூகத்தின் நலன் நோக்கம் ஆகியவற்றிலிருந்து ஒரு படி வேறுபட்டது என்னலாம். ஆனால் அந்தப் பழைய பண அடிப்படைப் பொருளியல் முறையைவிடப் போதிய அளவு முதிர்ச்சியடைந்துள்ள பணமதிப்பு - அடிப்படைப் பொருளியல் (Credit-Economy) முறையிலும் அதனோடிணைந்த கொடுக்கல் வாங்கல் சக்தி வாய்ந்த மூல தன முறையிலும்; தொழில் துறையில் கொள்கை நிர்ணய உரிமையுடைய ஆதிக்க வர்க்கத்தினர், தங்கள் ஆதிக்கத்திலுள்ள நிலையங்களின் நலன்களிலிருந்து ஒருபடி வேறுபட்ட நலன்களை உடையவராகவும்; பொதுமக்கள் சமூகத்தின் நலன்களிலிருந்தும் மற்றும் ஒருபடி வேறுபட்ட நலன் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.
"நிலையங்களின் மேற்பார்வையாளர்களாகிய அவர் களுடைய தொழில் நோக்கம் உற்பத்திச் சரக்குகளின் நல்லுபயோகமுமன்று, அதன் விற்பனைகூட அன்று: தாங்கள் கையாண்டுவரும் முதலீட்டின் விலை மதிப்புக்களிடையே தங்களுக்குச் சாதகமாக ஏற்படும் உயர்வு தாழ்வு வேற்றுமைகள் மட்டுமே - அதாவது முதலீட்டின் உண்மையான சம்பாதிக்கும்