உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போதும் முதலாளித்துவம்

33

ஆற்றலுக்கும் அவ்வாறு கொள்ளப்படும் மதிப்பீடான சம்பாதிக்கும் ஆற்றலுக்கும் உள்ள மாறுபாட்டளவே அவர்கள் தொழிலாதாயமாகும்." அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்கூடக் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார்: "சட்ட சபைகளையும் நகர சபைகளையும் கைக்கூலி முதலிய ஊழல்களால் கெடுத்து வாழ்பவனும், தன் கையில் சிக்கிய முதலீட்டுச் சீட்டாளர்களை (Stock-holders) உறிஞ்சி வாழ்பவனும் சூதாட்டக் களத்தில் பணம் பறித்துக் கொழுப்பவனை ஒத்த ஆன்மீக வளர்ச்சி நிலை உடையவரேயாவர் தரகு பெறுபவன்- மொழித்தரவுகளில்

(Votes)

வாணிபம் செய்பவன் பிணையப் பணத்தில் சூழ்ச்சியாள்பவன் - ஒழுக்கக் கேட்டுக்கு வகை செய்பவன் - அதற்கு ஆதரவு தருபவன் - வழிப்பறிக் கொள்ளைத் தலைவன் - மக்கள் உணர்ச்சி வழி அவர்களை ஊக்கிப் பயன் பெறுபவன், (demagogue) கூலிக்காக மக்களைத் துன்புறுத்திக் கொல்பவன் ஆகிய இன்னோர்களனைவரும் ஒருதரத்து ஊழல் பண்ணையில் முளைத்தவர்கள். மனிதத் தன்மையுடைய எவனும் இவர் வெறுக்காமலிருக்க முடியாது."

பயனற்ற அல்லது தீமை தரும் பல தொழில்களை வளர்த்துப் பெருக்கும் குற்றம் முதலாளித்துவத்திற்குரியது. அவற்றுட் சில நாட்டு மக்களின் மிகச் சிறந்த மூளைகளைப் பயன்படுத்துகிறது. ஆயினும் சமூகச் செல்வ வளர்ச்சிக்கு அது சிறிதும் உதவுவதில்லை. வழக்கறிஞர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உலகின் வழக்குகளில் 10க்கு 9 விழுக்காடு சொத்துரிமை பற்றியவையோ, அல்லது முதலாளித்துவத்தைச் சார்ந்த வேறு செய்திகள் பற்றியவையோதான். தனி உடைமை ஒழிக்கப்பட்டு விட்டால் இவ்வழக்கறிஞரின் தேவை மிகக் குறைந்து அவர்கள் உழைப்பு மற்ற ஆக்கத் துறைக்காரியங்களுக்கு உதவுமென்று சமதர்மிகள் நம்புகின்றனர்.

உற்பத்தித் திறமை பற்றியமட்டில் முதலாளித்துவத்தின் மீது சுமத்தப்படத் தக்க குற்றச் சாட்டுகள் இவை. சமதர்மிகளின் கண்டனத்தின் முதல் பகுதியாகிய இதனை விடுத்து அதன் இரண்டாம் பகுதிக்குச் செல்வோம். இது உழைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைச் சூழ்நிலைகள், இரு சாராரும் இணைந்து உற்பத்தி செய்யும் செல்வத்தில் அவர்களுக்குக்